Published On: Friday, January 15, 2016
பாலமுனை விளையாட்டு மைதானம் பிரதி அமைச்சர் ஹரீஸின் நிதி ஒதுக்கீட்டில் துரிதமாக அபிவிருத்தி!
விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் 4 மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் மூலம் பாலமுனை விளையாட்டு மைதானத்தின் அபிவிருத்தி வேலைகள் துரிதமாக இடம்பெற்று வருகின்றது.
இந்நிதி ஒதுக்கீட்டின் மூலம் மேற்கொள்ளப்படும் பாலமுனை விளையாட்டு மைதானத்திற்கான சுற்றுமதில் நிர்மாணப் பணியினை பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளரும் முன்னாள் அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளருமான சட்டத்தரணி எம்.ஏ.அன்சில் பார்வையிட்டதோடு சுற்றுமதிலுக்கு அழகுபடுத்தப்பட்ட கம்பி பிரேம்களை பொருத்தி வைக்கும் வேலையினையும் இன்று வியாழக்கிழமை (14) ஆரம்பித்து வைத்தார்.
(ஹாசிப் யாஸீன்)

