Published On: Friday, January 08, 2016
மத்திய மாகாணத்தில் உள்ள உள்ளுராட்சி சபைகளில் அட்டன் டிக்கோயா நகரசபை முதலிடம்
2015ம் ஆண்டுக்கான உள்ளுராட்சி மன்றங்களுக்கு வழங்கப்படும் தேவை விருத்திக்கான உள்ளுராட்சி வார முதலிடத்தை அட்டன் டிக்கோயா நகர சபை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
மக்கள் பயன்பாடு வேலை பிரிவு தினம், நூலக பாதுகாப்பு, வருமான வரி போன்றவற்றிக்கு முதலிடமும், விளையாட்டு தினத்திற்கு இரண்டாமிடமும் பெற்று மத்திய மாகாணத்தில் உள்ள உள்ளுராட்சி சபைகளில் அட்டன் டிக்கோயா நகர சபை முதலிடத்தை தக்க வைத்துள்ளது.
இது தொடர்பான ஆய்வு மத்திய மாகாண உள்ளுராட்சி சபையில் முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தலைமையில் உள்ளுராட்சி ஆணையாளர் உட்பட பல அதிகாரிகள் ஊடாக ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வின் அடிப்படையில் அட்டன் டிக்கோயா நகர சபை முதலிடம் பெற்றுள்ளமை குறிப்பிடதக்கது.
இதற்கான விருதினை மத்திய மாகாண உள்ளுராட்சி சபை ஆணையாளர் ஊடாக அட்டன் டிக்கோயா நகர சபையின் செயலாளர் எஸ்.பிரியதர்ஷினி பெற்றுக்கொண்டார்.
இதன்போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம்.
(க.கிஷாந்தன்)