Published On: Friday, January 08, 2016
அட்டாளைச்சேனை அல் முனீரா பாடசாலை மாணவிகள் தென்கிழக்கு பல்கலையில் ஆய்வுகூட பயிற்சியில் ஈடுபட்டனர்.
அண்மையில் விஞ்ஞான பிரிவு ஆரம்பிக்கப்பட்டிருக்கும் அட்டாளைச்சேனை அல் முனீரா பெண்கள் உயர்தர பாடசாலை மாணவிகள் தென்கிழக்குப் பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தில் 2016-01-08 ஆம் திகதி தங்களுக்கு குறையாக இருக்கும் ஆய்வுகூடம் சார்ந்த பயிற்சிகளை கற்றுக்கொண்டனர்.
தென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளரும் அட்டாளைச்சேனை அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவரும் அல் முனீரா பெண்கள் உயர்தர பாடசாலையின் அபிவிருத்திச் சங்க உறுப்பினரும் அப்பாடசாலையில் விஞ்ஞான பிரிவுவை உருவாக உழைத்தவருமான ஏ.எல்.ஹனீஸ் அவர்களின் முயற்சியில் இடம்பெற்ற இப் பயிற்சி நிகழ்வில் ஆசிரியர் எம்.ஆர்.சியாஹூர் ரஹுமான் மற்றும் ஆசிரியை ஏ.எல்.சிபானா ஆகியோர் தலைமையில் 18 மாணவிகள் தங்களது ஆய்வுகூடம் சார்ந்த பயிற்சிகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.
-எம்.வை.அமீர்-