Published On: Friday, January 08, 2016
நல்லாட்சியின் ஒருவருட பூர்த்தியை முன்னிட்டு தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மரநடுகை மற்றும் சிரமதான நிகழ்வு
இலங்கை திருநாட்டில் நல்லாட்சி மலர்ந்து ஒருவருட பூர்த்தியாகியுள்ளதை முன்னிட்டு தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மரநடுகை மற்றும் சிரமதான நிகழ்வு 2016-01-08 திகதி உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜிம் தலைமையில் பதிவாளர் எச் அப்துல் சத்தாரின் வழிநடத்தலின் கீழ் பல்கலைக்கழக பீடாதிபதிகள், துறைத்தலைவர்கள், உயர் நிருவாக உத்தியோகத்தர்கள், நிதியாளர், நூலகர் மற்றும் கல்விசார உத்தியோகத்தர்கள் என எல்லோரது ஒத்துழைப்புடனும் இடம்பெற்றது.
குறித்த சிரமதான நிகழ்வில் உத்தியோகத்தர்கள் பலகுழுக்களாக பிரிந்து தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பல்வேறு பிரதேசங்களையும் சுத்தம் செய்ததுடன் மர நடுகையிலும் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
-எம்.வை.அமீர் -


