Published On: Wednesday, January 06, 2016
நியூ ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் உதைப்பந்தாட்ட வீரா்களுக்கான விளையாட்டு சீருடை அறிமுகம் நிகழ்வு
அட்டாளைச்சேனை நியூ ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் உதைப்பந்தாட்ட வீரா்களுக்கான புதியஆண்டின் புதிய சீருடை அறிமுக நிகழ்வு நேற்று மாலை (05) கழகத்தின் அட்டாளைச்சேனை கோணவத்தை காரியலாயத்தில் இடம்பெற்றது.
கழகத்தின் தலைவர் தேசகீர்த்தி எம்.ஐ.முஹம்மட் றியாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு பிரதம அதிதி சமூக சேவையாளர் ஏ.எம்.மனாஸ், இலங்கை மனித உரிமைகள் அமைப்பின் அம்பாறை மாவட்ட பணிப்பாளர் ஏ.எச்.ஹம்சா சனுாஸ் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் பிரதம அதிதி சமூக சேவையாளர் ஏ.எம்.மனாஸ் 2016 ஆம் ஆண்டுக்கான கழகத்தின் புதிய சீருடையை அறிமுகம் செய்து வைத்தார்.
அபு அலா -