Published On: Wednesday, January 06, 2016
அக்கரைப்பற்று பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம்
அக்கரைப்பற்று பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இன்று (06) அக்கரைப்பற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
சுகாதார பிரதி அமைச்சர் தலைமையில் இடம்பெற்ற அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நசீர், மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எல்.தவம், எம்.எஸ்.உதுமாலெவ்வை, பிரதேச செயலாளர் ஏ.எம்.அப்துல் லத்தீப் உள்ளிட்ட திணைக்களத் தலைவர்கள், துறைசார்ந்த உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இக்சுட்டத்தில், கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் கடந்த முறை வகுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படாமல் உள்ள வேலைத்திட்டங்கள் என்பன விரிவாக ஆராயப்பட்டதுடன் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள வீதி அபிவிருத்தி, வடிகாலமைப்பு மற்றும் வடிகாலமைப்புச் சீராக்கல், மீனவர் பிரச்சினை, மீனவர்களின் சந்தைப்படுத்தலுக்கான இலகு வழிமுறைகளை ஏற்படுத்தல், சுகாதாரத்துறை விருத்தி செய்தல் குறிப்பாக வைத்தியசாலைகளுக்களுக்கான அம்பியுலன்ஸ் வசதி ஏற்படுத்தல், சந்தைக் கட்டட விஸ்தரிப்பு நிர்மாணம், மீனவர் சந்தை விஸ்தரிப்பு, கல்வித்துறை அபிவிருத்தி, குறிப்பாக அக்கரைப்பற்று பிரதேச சபை எல்லைக்கட்பட்ட பகுதியில் இவ்வாண்டு புதிய பாடசாலை ஆரம்பிப்பதில்லை என தீர்மானிக்கப்பட்டது.
இதேவேளை அக்கரைப்பற்று பிரதேசத்தில் கல்வி. கலை, போக்குவரத்து, தபால்சேவை, விளையாட்டுத்துறை, நவீன தொடர்பாடல் சேவை போன்ற பல்வேறான விடயங்களை மக்கள் தேவகை;காக துரித கதியில் விருத்தி செய்வதற்கான தீர்மானங்கள் எட்டப்பட்டதுடன், பயன்படுத்தப்படாமல் உள்ள பல்தேவைக்கட்டடம், மீனவர் ஓய்வு நிலையம், சுகாதாரத்துறை விஸ்தரிப்பிற்கான ஏற்பாடுகள் போன்றன விரைவில் நடைமுறைப்டுத்தப்படுவதற்கான தீரமானங்களும் எடுக்கப்பட்டன.
பைஷல் இஸ்மாயில் -