Published On: Tuesday, February 16, 2016
சமூக அபிவிருத்திக்கான இளைஞர் அமைப்பின் வருடாந்த பரிசளிப்பு விழா 2016-மாளிகைக்காட்டில்
சமூக அபிவிருத்திக்கான இளைஞர் அமைப்பின் வருடாந்த பரிசளிப்பு விழா கடந்த 2016.02.12 அன்று அமைப்பின் தலைவரும் முன்னால் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும் நாபீர் பௌன்டேஷன் அமைப்பின் அம்பாறை மாவட்ட இளைஞர் ஒருங்கிணைப்பாளர் தாணீஸ் றகுமத்துல்லா அவர்களின் தலைமையில் மாளிகைக்காடு அல்-ஹுசையின் வித்தியாலயத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக நாபீர் பௌன்டேஷன் அமைப்பின் தலைவர் பொறியியலாளர் நாபீர் அவர்கள் கலந்துகொண்டதுடன் இளைஞர் சேவை அதிகாரிகள் பாடசாலை அதிபர்கள் கல்வியலாளர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.


