Published On: Tuesday, February 16, 2016
சேவையை பாராட்டி நினைவுச் சின்னம்
கல்முனை கொமர்சியல் வங்கியின் முகாமையாளராக பணியாற்றி இடமாற்றம் பெற்றுச் செல்லும் மடவளையைச் சேர்ந்த ஜனாப் ஜே.எம்.சித்தீக் அவர்களின் சேவையை பாராட்டி கல்முனையின் பிரபல பத்திரிகை விற்பனை முகவரான ஹனீபா ஹோட்டல் நிறுவனத்தின் உரிமையாளரான ஏ.எம்.ஹனீபா அவர்களினால் உறவுக்கான நினைவுச் சின்னம் அவரது இல்லத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.
இதன்போது ஹனீபா ஹோட்டல் நிறுவன உரிமையாளரின் மகன் எச்.எம். நௌபீர் கலந்துகொண்டிருந்ததுடன் இங்கு மிகச் சிறப்பாக சேவையாற்றியமைக்காக பிரதேச மக்கள் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
(எஸ்.அஷ்ரப்கான்)
