Published On: Tuesday, February 16, 2016
இலங்கை வீரர்களை உச்சாகப்படுத்தும் பணியில் பிரதி அமைச்சர் ஹரீஸ் மும்முரம்!
இந்தியா குவாத்தியில் இடம்பெறும் 12வது தெற்காசிய விளையாட்டு போட்டியில் பங்குபற்றும் இலங்கை வீரர்களை விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையிலான விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் திசாநாயக்க, பணிப்பாளர் நாயகம் ரொஷான் சந்திர உள்ளிட்ட குழுவினர் உற்சாகப்படுத்தும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்றும் (14) இன்றும் (15) இடம்பெற்ற கபடி, 50 மீற்றர் துப்பாக்கி சுடுதல், யூடோ, குத்துச்சண்டை, டைகொண்டோ மற்றும் பல போட்டிகளில் பங்குபற்றிய இலங்கை வீரர்களை விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையிலான குழுவினர் போட்டி நிகழ்சிகள் இடம்பெற்ற இடங்களுக்கு நேரடியாக சென்று வீரர்களை உச்சாகப்படுத்தினர்.
இதற்கமைவாக 50 மீற்றர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இலங்கை வீரர் வெள்ளிப்பதக்கத்தையும், கபடி போட்டியில் இலங்கை ஆண் கபடி அணியினரும், பெண் கபடி அணியினரும் தலா வெண்கலப் பதக்கத்தையும், குத்துச் சண்டை போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும் பெற்று நாட்டுக்கு பெருமையை பெற்றுத்தந்துள்ளனர்.
(ஹாசிப் யாஸீன்)