Published On: Thursday, February 11, 2016
நாட்டிக்கு பெருமை தேடித்தந்த வீரர்களை வாழ்த்துகின்றேன்.
இந்தியாவில் இடம்பெற்று வரும் தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப்போட்டியில் மூன்றாம் இடம்பெற்று வெண்கலப்பதக்கத்தை பெற்ற பொத்துவில் மண்ணைச் சேர்ந்த அஷ்ரஃப்பிக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.
மேலும் பிரதி அமைச்சர் ஹரீஸ் தெரிவிக்கையில்,
அஷ்ரஃப் பெற்ற வெண்கலப்பதக்கத்தின் மூலம் கிழக்கு மாகாண மக்களும், குறிப்பாக அம்பாறை மாவட்ட மக்கள் மகிழ்ச்சியடைவதுடன் நாட்டுக்கு சர்வதேச ரீதியில் பெருமையை எமது பிரதேசத்தை சேர்ந்த மகன் ஒருவர் பெற்றுக்கொடுத்ததையிட்ட விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் என்ற ரீதியில் பெருமையடைகின்றேன்.
தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களைப் பெற்று நாட்டுக்கு மேலும் பெருமை தேடித்தந்த ஏனைய வீர, வீராங்கனைகளுக்கும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
எமது நாட்டு வீர, வீராங்கனைகளை இப்போட்டிக்கு தயார் படுத்திய பயிற்றுவிப்பாளர்கள், விளையாட்டு அமைச்சின் உயர் அதிகாரிகள் மற்றும் தெற்காசிய விளையாட்டுப் போட்டி களத்தில் நின்று நாட்டின் வீர, வீராங்கனைகளை உச்சாகப்படுத்தி வரும் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர, பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைவதாக பிரதி அமைச்சர் ஹரீஸ் மேலும் தெரிவித்துள்ளார்.
(ஹாசிப் யாஸீன்,எம்.எம்.ஜபீர்)
