Published On: Monday, February 08, 2016
கோவையில் சமாதான கலைவிழா மற்றும் நான் நோன்பு இருக்கிறேன் உள்ளிட்ட 3 குறும்படங்கள் வெளியீட்டு விழா
கோவையில் சமாதான கலைவிழா மற்றும் நான் நோன்பு இருக்கிறேன் உள்ளிட்ட 3 குறும்படங்கள் மற்றும் அன்பு டெலிபிலிம் தொடக்க விழா நடைபெற்றது. இதில் ஊடகவியலாளர்கள் மற்றும் பல்வேறு அமைப்பு தலைவர்கள் கலந்து கொண்டனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த புத்தாநத்தம் கிராமத்தைச் சேர்ந்த ஆய்ஷா கனி மகன் மவ்லவி காஜா மைதீன் அஹ்சனி, இவருடைய தந்தை அரவணைப்பில் இல்லாமல் தாயோடு அரவணைப்பில் வளர்ந்த இவரை வளர்ப்பதற்காக இவருடைய தாய் பல்வேறு இடங்களில் வேலை செய்து தனது மகனை மற்றவர்கள் போற்றும் அளவில் வளர்த்தார். பின்னர் இவருடைய தாய் மார்க்க கல்வி பயில வேண்டும் என்ற ஆசையை சிறு வயதிலிருந்தே ஆர்வத்தை ஊட்டினார்.
தாயுடைய ஆசையை நிறைவேற்றியவர் தான் குறும்பட் இயக்குநர் காஜா மைதீன்.
சிறந்த மகனாக வளர்த்தற்காக இவருடைய தாயார் ஆயிஷா கனிக்கு இஸ்லாமிய ஆளுமை விருது சமீபத்தில் சென்னையில் வளங்கப்பட்டது என்பது குறிப்பிட தக்கது. குறும்பட் இயக்குநர் காஜா மைதீன் மார்க்க கல்வி சம்பந்தப்பட்டதை வைத்து குறும்படத்தை இயக்கி மார்க்கம் என்ன சொல்கிறதோ அதையே வைத்து குறும்படங்களை தயாரித்து வருகிறார் என்பது பெருமைக்குறியதாகும்.
கோவையில் சமாதான கலைவிழா மற்றும் நான் நோன்பு இருக்கிறேன் உள்ளிட்ட 3 குறும்படங்கள் மற்றும் அன்பு டெலிபிலிம் தொடக்க விழா மற்றும் ஊடக விழிப்ப்புணர்வு கருத்தரங்கம் கோட்டைமேடு பொன்விழா திருமண மண்டபத்தில் ஞாயிற்று கிழமை மாலை நடைபெற்றது விழாவிற்கு புத்தாநத்ததைச் சேர்ந்த குறும்பட இயக்குநர் மவ்லவி காஜா மைதீன் அஹ்சனி தலைமை வகித்து குறும்படங்களை பற்றி விளக்க உரை ஆற்றினார். மீடியா 7 நிர்வாக இயக்குநர் கோவை தங்கப்பா அனைவரையும் வரவேற்று பேசினார்.
ஹிதாயத்துல் இஸ்லாம் ஜமாஅத் தலைவர் தர்வேஷ், கறுப்பு வெள்ளை டிராவல்ஸ் உரிமையாளர் ஹக்கீம் மன்சூர் ஆகியோர் முன்ன்னிலை வகித்தனர். முஹம்மது ஷஃபி விழாவின் அறிமுக உரையை நிகழ்த்தினார்.புறம் என்ற ஆவணப்படத்தை கோவை ஜாபர் வெளியிட பரமக்குடி அன்னை ஆயிஷா டிரஸ்ட் பொதுச்செயலாளர் எ.எம் இப்ராஹீம் பெற்று கொண்டார். புறம் படத்தின் கருத்துரையை மவ்லவி ஜலாலுதீன் இம்தாதி, இமயம் தொலைக்காட்சி நெறியாளர் ஊடகவியாளாருமான சுஃப்யான் ஆகியோர் இஸ்லாமியர்கள் எவ்வாறு ஊடக பணிகளில் இருக்கிறார்கள் என்பதையும், நாம் எவ்வாறு தள்ளப்படுகிறோம் எனபதையும் பல்வேறு காரணங்களை எடுத்து காட்டி இனிவரும் காலங்களில் ஊடகத்துறையில் நம்முடைய பங்கு எப்படி இருக்க வேண்டும் என்பதியும் எடுத்து கூறினார்.
நான் நோன்பு இருக்கிறேன் என்ற குறும்படத்தை சென்னை யுனிவர்சல் உரிமையாளர் நைனார் முகமது வெளியிட கோவை அத்தார் ஜமாஅத் தலைவர் வழக்கறிஞர் பஷீருதீன் பெற்று கொண்டார். இந்த குறும்படத்தின் கருத்துரையை ஊடகவியளாளர் அத்தேஷ் பேசுகையில் நம் சமுதாயத்தில் நிலைத்து நிற்க வேண்டும் என்றால் எந்த பாகுபாடுமின்றி ஒருமித்த கருத்துடன் ஒரு தொலைக்காட்சியோ அல்லது பத்திரிக்கை துறையை ஆரம்பித்தால் நம் கருத்துக்களும் நம் சமுதாயத்தின் நிலவரங்களையும் சுதந்திரமாக எழுதலாம். இன்று மீடியா துறை இல்லை என்றால் பல்வேறு அரசியல் கட்சிகள் உருவாக்கி இருக்க முடியாது என்று பேசினார்.
பாஸ்.. பாஸ்… என்ற குறும்படத்தை கோவை பிரஸ் கிளப் சாதிக் வெளியிட நியூ கோல்டன் பிளாஸ்டிக் உரிமையாளர் சாகுல் ஹமீத் பெற்று கொண்டார். வெல்பேர் பார்டி மாநில தலைவர் எஸ்.என் சிக்கந்தர், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா பொதுச்செயலாளர் ஷேக் முஹம்மது அன்சாரி எஸ்.டி.பி.ஐ கட்ச்சி பொதுச்செயலாளர் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.
விழாவில் மெஹர் டெலி பிலிம், மற்றும் கடல் கடந்த பறவைகள் ஆவணப்படம், அவள் என்ற குறுமபடங்கள் திறையிடப்பட்டது. இவ்விழாவில் கோவை மாவட்ட இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தெற்கு மாவாட்ட தலைவர் அப்துல் கபூர், கோம்பை மாணவரணி அமைப்பாளர் ஜெ.பஷீர் அஹமது, திருச்சி ஊடகவியளாளர் எம்.கே ஷாகுல் ஹமீத், நடிகர் கபீர் அப்பா, மற்றும் பல்வேறு ஜமாஅத் நிர்வாகிகள் தன்னார்வ தொண்டு நிர்வாகிகள் உள்பட பலர் கல்ந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை ஊடகம் இணையதளம் மற்றும் மீடியா 7 லைவ், ஆர்ட் ஆப் பீஸ் பவுண்டேஷன், ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.
திருச்சி பிப் – 08