எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Thursday, March 10, 2016

இந்தியா பாகிஸ்தான் மோதும் இருபது ஓவர் உலகக் கோப்பை போட்டி தர்மசாலாவிலிருந்து கொல்கத்தாவுக்கு மாற்றம்

Print Friendly and PDF

இந்தியா பாகிஸ்தான் மோதும் இருபது ஓவர் உலகக் கோப்பை போட்டி தர்மசாலாவிலிருந்து கொல்கத்தாவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி மார்ச் 8-ம் தேதி முதல் ஏப்ரல் 3-ம் தேதி வரை இந்தியாவின் 8 நகரங்களில் நடைபெறுகின்றன. தகுதிச் சுற்று, பிரதான சுற்று என இரு நிலைகளில் போட்டிகள் நடைபெறுகிறது.அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்த இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டி, மார்ச் 19 அன்று தர்மசாலாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்தியா-பாகிஸ்தான் போட்டியை நடத்தமுடியாது. அதற்குத் தேவையான பாதுகாப்பை வழங்க இயலாது என ஹிமாசலப் பிரதேச மாநில முதல்வர் வீரபத்ர சிங், உள்துறை அமைச்சகத்துக்குக் கடிதம் எழுதியுள்ளார்.  மேலும், சில முன்னாள் ராணுவத்தினரும் தர்மசலாவில் இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பிசிசிஐக்குக் கடும் நெருக்கடி எழுந்துள்ளது.
இதையடுத்து பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பாதுகாப்பு அதிகாரிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை தர்மசாலாவுக்கு வந்து பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்தனர். பாதுகாப்பு குறித்து அவர்கள் அதிருப்தி தெரிவித்ததாகத் தெரிகிறது.இந்நிலையில், இந்தியா -பாகிஸ்தான் மோதும் போட்டி தர்மசாலாவுக்குப் பதில் கொல்கத்தாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா-பாகிஸ்தான் மோதும் போட்டி அதே நாள், அதே நேரம் தர்மசாலாவுக்குப் பதில் கொல்கத்தாவில் நடைபெறும் என, சர்வதேச கிரிக்கெட் சங்கத்தின் முதன்மை செயல் அலுவலர் டேவ் ரிச்சட்ர்சன் கூறினார்.
ஆனால், இந்த போட்டி திட்டமிட்டபடி தர்மசாலாவில் நடைபெறும் என்று நேற்று வரை பிசிசிஐ அறிவித்து இருந்த நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த போட்டி கொல்கத்தாவுக்கு மாற்றப்படுவதாக ஐசிசி இன்று அறிவித்தது. ஐசிசியின் இந்த முடிவை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் வரவேற்றுள்ளது. செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் சஹ்ராயர் கான், ஐசிசியின் முடிவை வரவேற்பதாக தெரிவித்துள்ளார். இருப்பினும், பாதுகாப்பு குறித்து இந்திய அரசின் உறுதி மொழிக்காக, பாகிஸ்தான் அணியின் இந்திய பயணம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா

Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2