Published On: Friday, March 11, 2016
இளைஞர் தொண்டர் அணி உறுப்பினர்களுக்கு மு.கா பிரதித் தலைவர் ஹரீஸின் வேண்டுகோள்!
நாளை சனிக்கிழமை (12) அட்டாளைச்சேனை பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ள முஸ்லிம் காங்கிரஸ் இளைஞர் தொண்டர் அணியினருக்கான ஒன்றுகூடல் நிகழ்வுக்கான பூர்வாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கட்சியின் பிரதித் தலைவர், பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் உரிய நேரத்திற்கு வருகை தரவுள்ளதால் இதில் கலந்துகொள்ளவுள்ள இளைஞர் தொண்டர் அணி உறுப்பினர்கள் உரிய நேரத்திற்கு காலை 8.00 மணிக்கு சமூகமளிக்குமாறும் அத்துடன் கட்சியினால் தங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஒன்றுகூடலுக்கான அழைப்பிதழ் கடிதத்தினை சில அசௌகரியங்களை தவிர்க்குமுகமாக வரும்போது கொண்டுமாறும் பிரதித் தலைவர் ஹரீஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
நாளைய இளைஞர் தொண்டர் அணியினருக்கான ஒன்றுகூடலில் பல்வேறு நிகழ்வுகள் காலை முதல் மாலை இடம்பெறவுள்ளதாகவும் பிரதித் தலைவர் ஹரீஸ் மேலும் தெரிவித்தார்.
(ஹாசிப் யாஸீன்)
