Published On: Wednesday, March 16, 2016
மறைந்த திருமதி மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம் அவர்களின் மறைவுக்கு சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர் அனுதாபம்
கொழும்பு வெள்ளவத்ததை இராமகிருஷ்ணன் மண்டபத்தில் சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற கருத்தருங்கில் “தமிழர்களின் தாகம் தனித் தாயகம்” என்ற தலைப்பில் அண்மையில் மறைந்த முன்னால் தமிழ் கூட்டமைப்பு தலைவர் அ. அமிர்தலிங்கத்தின் மனைவியுமான திருமதி மங்கையர்க்கரசி அமிர்தலிங்கமும், முன்னால் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஈழவேந்தன் அவர்களும் கலந்து கொண்டு காரசாரமான கருத்துக்களை அந் நாட்களில் அரசிக்கு எதிராகவும் பகிரங்கமாக சவால் விடுத்து பேசிய அந்நிகழ்வை இன்று நான் நினைவூட்டிப் பார்ப்பதாகவும் திருமதி மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம் அவர்கள் தனது “கனீரென்ற” என்ற குரல் வளத்தையும் அவரின் கனல் கக்கும் மேடைப் பேச்சுக்களை கேட்டும் நேரடியாக பார்கும் பாக்கியம் கிடைத்ததையிட்டும் நான் பெருமைப்படுகிடுறேன்;.
அந்நாட்களில் கொழும்பு தலைநகரில் நடைபெற்ற அதிகமான எழுச்சிக் கூட்டங்களில் கலந்து கொண்டு தனது அரசியல் பேச்சுக்கள் மூலம் கனிசமான உனர்வுட்டும் உரைகள் மூலம் பாறிய பங்களிப்பையும் வழங்கி வந்துள்ளார்;. அவரின் மறைவு தமிழ் பேசும் மக்களுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும் எனவும் அன்னாரின் மறைவுக்கு தமது ஆழ்ந்த அனுதாபத்தை தெறிவிப்பதாகவும் முஸ்லிம் காங்கிரஸின் முன்னால் பொதுச் செயலாளரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான எஸ்;.எம்.ஏ. கபூர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
மேற்படி நிகழ்வு சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற போது எடுக்கப்பட்ட புகைப்படமும் அது வெளிந்த திகதி 04.11.1976 எனக் குறிப்பிடப்பட்ட பிரதியும் இதற்கு ஆதாரமாக இங்கு இணைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நாம் தடம் பதித்து வந்த எமது கடந்தகால வரலாற்றுக் குறிப்புக்களை எல்லோரும் இன்றாவது அறிந்திருப்பது அவசியம் எனவும் இந் நாட்களில் முன்டியடித்து கொன்டு “முக நூலுக்கு” முகம் காட்டும் அரசியலில் முதிர்ச்சியற்ற சில சில்லரைகள் நாம் அன்று முதல் பல அரசியல் பாசறைகளில் பயின்று வந்துள்ளோம் என்பதையும் இவர்கள் இப்போதாவது அறிவார்களா?
