Published On: Wednesday, March 16, 2016
பட்டதாரி ஆசிரியர்களாக ஆசிரிய சேவையில் உள்வாங்கப்பட்ட ஆசிரியர்கள் பாடசாலைகளில் ஆரம்பக் கல்விகற்பிக்கும் ஆசிரியர்களாக நியமனம்
பட்டதாரி ஆசிரியர்களாக ஆசிரிய சேவையில் உள்வாங்கப்பட்ட ஆசிரியர்கள் பாடசாலைகளில் ஆரம்பக் கல்விகற்பிக்கும் ஆசிரியர்களாக நியமனம் வழங்கப்பட்டபோதும் பாடசாலைகளில் நீண்ட காலமாக நிலவிய பாடங்களுக்குரிய ஆசிரியர் வெற்றிடங்களுக்காக கடந்த 10, 15 வருடங்களாக சேவை புரிந்து வந்த ஆசிரியர்களை ஆரம்ப பிரிவுக்கு கற்பிப்பதற்கான அறிவுருத்தல் வழங்கப்பட்டதனால் பல பாடசாலைகளின் கல்வி செயற்பாடுகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை.
கிழக்கு மாகாண பாடசாலைகளில் பல வருடங்களாக க.பொ.த. சாதாரண தரத்திலும், உயர் தரத்திலும் தமிழ், வரலாறு, குடியியல், சித்திரம், சுகாதாரம் போன்ற பாடங்களை கற்பித்து வந்த பட்டதாரி ஆசிரியர்களை கல்வி திணைக்களத்தால் பாட மாற்றம் வழங்கப்பட்ட பயிற்றப்பட்ட ஆசிரியர்களை ஆரம்ப பிரிவுக்கு இடமாற்றப்பட்டதால் பல பாடசாலைகளின் கல்வி செயற்பாடுகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.நடராசாவினால் சமர்ப்பிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணல் என்ற தனி நபர் பிரேரணை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் கிழக்கு மாகாண முன்னால் அமைச்சரும், மாகாண சபை உறுப்பினருமான எம்.எஸ்.உதுமாலெப்பை மேற்கண்டவாறு உரையாற்றினார்.
கிழக்கு மாகாண சபை தவிசாளர் சந்திரதாச கலபெத்தி தலைமையில் கிழக்கு மாகாண சபை அமர்வு இன்று (15) 9.50 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டது.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
தமிழ், குடியியல், சுகாதாரம், கணிதம், இஸ்லாம், வரலாறு போன்ற பாடங்களை கற்பித்து வந்த ஆசிரியர்கள் ஆரம்ப பிரிவுக்கு மாற்றப்பட்டதால் பொத்துவில் உப வலயத்திலுள்ள பாடசாலைகளில், பொத்துவில் மத்திய கல்லூரியில் 08 ஆசிரியர்களும், அல் கலாம் மஹா வித்தியாலயத்தில் 03 ஆசிரியர்களும், பொத்துவில் அல் இர்பான் மகளிர் கல்லூரியில் 03 ஆசிரியர்களும் இடமாற்றப்பட்டதால் இக்கல்லூரிகளின் கல்வி செயற்பாடுகளில் பாரிய பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளது.
பொத்துவில் உப வலயப் பாடசாலைகளில் ஏற்கனவே 135 ஆசிரியர் வெற்றிடங்கள் நிலவுகின்ற நிலமையில்இ 19 ஆசிரியர்கள் இரண்டு வருட கால சேவை காலத்தினை நிறைவு செய்து விட்டு வெளி வலயங்களுக்குச் சென்றுள்ளனர். இந்த பெற்றிடங்களுக்கு பதில் ஆசிரியர்கள் 19 பேர் இதுவரை நியமிக்கப்படாத சூழ்நிலையில் குறித்த வலய பாடசாலை ஆரம்ப பிரிவுக்கு பட்டதாரி ஆசிரியர்கள் மாற்றப்பட்டதனால் பொத்துவில் உப வலய பாடசாலைகளில் கல்வி செயற்பாடுகள் மேன்மெலும் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே, பாடங்களுக்கான ஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்கும் நோக்குடன் கடந்த காலங்களில் கற்பித்த பாடங்களுக்கான ஆசிரியர்களை நியமிக்க கிழக்க மாகாண சபை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
அட்டாளைச்சேனை கல்வி கோட்டத்தில் உள்ள பாடசாலைகளில் தமிழ் பாடம் கற்பிக்கும் ஆண் ஆசிரியர்கள் இரண்டு பேர் மாத்திரம் உள்ளனர். குறித்த பாடங்களுக்கு போதிய ஆசிரியர்கள் இல்லாத நிலையில் துறை சார்ந்த ஆசிரியர்கள் இந்த பாடத்தினை கடந்த 10, 15 வருட காலமாக கற்பித்துள்ளனர். இரண்டு ஆசிரியர்களும் ஆரம்ப பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கைகளினால் க.பொ.த.சாதாரண, க.பொ.த.உயர்தர பரீட்சைகளுக்கு தோற்றும் மாணவர்களுக்கு பாரிய பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளது. எனவே கல்வி அமைச்சர் இதற்கான மாற்று ஏற்பாடுகளை செயற்படுத்த வேண்டும். எங்களின் கல்வி விடயங்களை கல்வி அமைச்சரிடம் முறையிட்டாலும், வேறு சிலர் கல்வி அமைச்சின் செயற்பாடுகளில் தீர்மானம் எடுக்கின்ற நிலமை தொடர்கின்றது எனக் குறிப்பிட்டார்.
(ஏ.எல்.ஜனூவர்)
