Published On: Tuesday, March 22, 2016
போரத்தின் பொதுக்கூட்டம் விசேட நிகழ்வு பொத்துவிலில்
அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தின் மாதாந்த பொதுக்கூட்டம் அமைப்பின் நிர்வாகக் குழுவினரின் விசேட ஏற்பாட்டில் பொத்துவில் அறுகம்பை “ த ப்ளு வேவ் ” ஹோட்டலில் மிக சிறப்பாக இன்று (22) இடம்பெற்றது.
போரத்தின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் அல்ஹாஜ் பகுர்தீன் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் சிரேஷ்ட ஊடகவியலாளர் அப்துல் மலீகின் புதல்வன் பொத்துவில் அல்-பஹ்றியா வித்தியாலய மாணவன் எம்.ஏ. எம். அப்துர் ரஹ்மான் அகில இலங்கை தமிழ் தின பேச்சுப் போட்டியில் மூன்றாம் இடத்தை பெற்றுக் கொண்ட பேச்சு இடம்பெற்றதுடன், அவருக்காக ஊக்குவிப்பு பரிசினை போரத்தின் நிர்வாக சபை உறுப்பினரும், பிரதி அமைச்சர் எச்.எம்.எம். ஹரீசின் ஊடக இணைப்பாளருமாகிய றியாத் ஏ. மஜீட் வழங்கி கௌரவித்தார்.
அத்துடன் பொத்துவில் பிரதேச தேவைகள் மற்றும் குறைபாடுகள் அவற்றை நிறைவேற்ற வேண்டியதன் அவசியம் பற்றி பொது சுகாதார பரிசோதகரும், சிரேஷ்ட ஊடகவியலாளரும், போரத்தின் பிரதித் தலைவருமான அப்துல் மலீக் எடுத்துக் கூறி பொத்துவில் பிரதேச அபிவிருத்தி தொடர்பில் கூடிய கவனமெடுத்து தேசியத்துக்கு தெரியப்படுத்தமாறு ஊடகவியலாளர் போரத்தினை வேண்டிக் கொண்டார்.
அதற்காக துரிதமாக செயற்பட உள்ளதாக போரத்தின் தலைவர் அங்கு குறிப்பிட்டமையுடன் விசேடமாக பொத்துவில் பிரதேசத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிவிப்பதற்காக பிரதேச இளைஞர் ஒருவரையும் அழைத்து அவருக்கான அறிவுரைகளும் சிரேஷ்ட ஊடகவியலாளர் யு.எல். மப்றுக் அவர்களால் வழங்கப்பட்டது.
பொது சுகாதார பரிசோதகரும், சிரேஷ்ட ஊடகவியலாளரும், போரத்தின் பிரதித் தலைவருமான அப்துல் மலீக் மற்றும் போரத்தின் உயர்பீட உறுப்பினர்களால் பொத்துவில் பிரதேசத்தின் சுற்றுலா விடுதிகளான “ ஹெங் குளுஸ், சிம் வே, பால் குறோ, ஸ்டா டச் ஆகிய சுற்றுலா விடுதிகளில் விருந்துபசாரங்களும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், இராப்போசனத்தை அறுகம்பே வோட்டர் றேஜ் றிசோட் உரிமையாளர் அப்துர் றஹீம் விசேடமாக ஏற்பாடு செய்திருந்தமை விசேட அம்சமாகும்.
போரத்தின் ஏப்ரல் மாதத்திற்கான பொதுக்கூட்டம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி இறக்காமத்தில் சிரேஷ்ட ஊடகவியலாளர் பிக்கீர் அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ளது.
(எஸ்.அஷ்ரப்கான்)