Published On: Sunday, April 24, 2016
வந்தாறுமூலையில் புதுவருட கிராமிய விளையாட்டு விழா
மட்டக்களப்பு வந்தாறுமூலை டைமன் விளையாட்டுக் கழகத்தின் 43ம் ஆண்டு நிறைவை முன்னிட்டும், சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டும் கிராமிய விளையாட்டு விழா கழக மைதானத்தில் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
கழக தலைவர் எஸ்.ஐங்கரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.ஸ்ரீநேசன், கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம், செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி கே.ஸ்ரீநாத், ஏறாவூர் பொலிஸ் உத்தியோகத்தர், வந்தாறுமூலை கிராம சேவை உத்தியோகத்தர்கள், பாடசாலை அதிபர்கள், பொதுமக்கள், சிறுவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது சிறுவர்களுக்கான மிட்டாய் ஓட்டம், வழுக்கு மரம் ஏறுதல், சாக்கோட்டம், தலையணைச் சமர், தயிர் முட்;டி உடைத்தல், மெதுவான சைக்கிள் ஓட்டம், சாப்பாட்டு ராமன், தேங்காய் திருவுதல், கிடுகு பின்னுதல், கயிறு இழுத்தல் உட்பட பல நிகழ்வுகள் நடைபெற்றது.
இங்கு நடைபெற்ற நிகழ்வில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு அதிதிகளால் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
ந.குகதர்சன்,
நிருபர்,








