Published On: Sunday, April 24, 2016
திருச்சியில் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் நடிகை நமீதா அதிமுகவில் இணைந்தார்
திருச்சியில் நடைபெற்ற அதிமுக பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் நடிகை நமீதா அதிமுகவில் இணைந்தார்.
எங்கள் அண்ணா, மகா நடிகன், ஏய், சாணக்கியா உள்பட பல படங்களில் நடித்து இருப்பவர் நடிகை நமீதா. தங்களது சீர்மிகு நிர்வாகமும், ஆட்சி முறையும் தமிழகத்தை இந்தியாவின் சிறந்த மாநிலமாக திகழ வைத்துள்ளது. சிறந்த தலைவியாக திகழும் தங்கள் தலைமையில் நானும் இணைந்து என்னாலான பங்களிப்பை தர விரும்புகிறேன் என முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதி இருந்தார்.
இந்நிலையில், இன்று மாலை திருச்சி ஜி. கார்னர் மைதானத்தில் நடைபெற்ற அதிமுக பிரசாரப் பொதுக் கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் பல்வேறு கட்சிகளை சார்ந்த நிர்வாகிகள், பிரபல திரைப்பட நடிகை நமீதா; திரைப்பட இயக்குநர் ஷக்தி சூ. சிதம்பரம்; திரைப்பட இயக்குநர் மற்றும் நடிகர் அனுமோகன்; சின்னத்திரை நடிகர் சங்கத் தலைவர் ழு. சிவன் ஸ்ரீநிவாஸ்; திரைப்பட இயக்குநர் மற்றும் நடிகர் ஊ. ரங்கநாதன் ஆகியோரும் நேரில் சந்தித்து தங்களைக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.
(திருச்சி - சாஹுல் ஹமீட்)




