Published On: Tuesday, July 12, 2016
அவுஸ்திரேலியா வர்த்தக பிரதிநிதிகளுக்கும் பிரதி அமைச்சர் ஹரீஸூக்குமிடையே சந்திப்பு
அவுஸ்திரேலியா நாட்டு வர்த்தக பிரதிநிதிகளுக்கும் விளையாட்டுத்துறை பிரதிஅமைச்சர் ஹரீஸூக்குமிடையேயான சந்திப்பு இன்று (12) செவ்வாய்க்கிழமைவிளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் காரியாலயத்தில் இடம்பெற்றது.
இச்சந்திப்பின் போது பிரதி அமைச்சர் ஹரீஸ்,
நாட்டில் நிலவும் சமாதான சூழலை அடுத்து வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இங்குமுதலீடுகளை மேற்கொள்வதற்கு சாதகமான ஏற்பாடுகளை எமது நல்லாட்சிஅரசாங்கம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது எனவும் இதனை பயன்படுத்தி அவுஸ்திரேலியமுதலீட்டாளர்களையும் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள வைக்குமாறுவர்த்தக பிரதிநிதிகளிடன் பிரதி அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
மேலும் இலங்கையின் விளையாட்டுத்துறை அபிவிருத்திற்கு தனியார் துறையினரின்பங்களிப்பினை எதிர்பார்ப்பதாகவும் அதனடிப்படையில் இலங்கையின்விளையாட்டுத்துறை அபிவிருத்திற்கு உதவுமாறும் அவுஸ்திரேலியா வர்த்தகபிரதிநிதிகளிடம் பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் கோரிக்கை விடுத்தார்.
இதனை ஏற்றுக்கொண்ட அவுஸ்திரேலியா வர்த்தக பிரதிநிதிகள் இதற்கானநடவடிக்கைகளை மேற்கொள்வதாக பிரதி அமைச்சரிடம் உறுதியளித்தனர்.
(ஹாசிப் யாஸீன்)