Published On: Wednesday, July 06, 2016
மட்டு காத்தான்குடியில் - நபி வழியில் புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் தொழுகை-படங்கள்.
முஸ்லிம்களின் புனித பெருநாள் தினங்களில் ஒன்றான ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை இன்று உலக முஸ்லிம்கள் கொண்டாடி வருகின்றனர்.
இலங்கையிலும் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் தொழுகை மற்றும் குத்பாப் பிரசங்கம் என்பன கிழக்கு மாகாணத்தில் பல பிரதேசங்களில் இன்று இடம்பெற்றது.
இதற்கமைவாக காத்தான்குடி தாருல் அதர் அத்தஅவிய்யா அமைப்பு ஏற்பாடு செய்த நபி வழியிலான புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் தொழுகை இன்று 06 புதன்கிழமை காலை சுமார் 6.30 மணிக்கு காத்தான்குடி கடற்கரையில் ஆ.ம. ஹாஜியார் வளவிற்கு முன்பாகவுள்ள கடற்கரை திடலில் இடம்பெற்றது.
இங்கு பெருநாள் தொழுகையையும், பெருநாள் குத்பாப் பிரசங்கத்தையும் ஏறாவூரைச் சேர்ந்த மார்க்கப் பிரச்சாரகர் மௌலவி ஏ.எம்.அப்துல் ஹனி (ஹாமி) நடாத்தி வைத்தார்.
இதில் ஆண், பெண் அடங்கலாக சுமார் 1000க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டதாக தாருல் அதர் அத்த அவிய்யா அமைப்பின் தலைவர் வை.பீ.ஏ. ரவூப் தெரிவித்தார்.
ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை இலங்கை நாட்டின் பல பாகங்களிலும் முஸ்லிம்கள் கொண்டாடி வருகின்றனர்.
குறிப்பு ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முஸ்லிம்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று அதன் பின்னர் கொண்டாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
(பழுலுல்லாஹ் பர்ஹான்)

