எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Tuesday, August 25, 2015

13 ஆவது திறுத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் சபை அமர்வின்போது வலியுறுத்தினார்

Print Friendly and PDF

இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் கீழ் அரசியல் அமைப்பில் கொண்டுவரப்பட்ட13 ஆவது திறுத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் இன்று (25) மாகாண சபை அமர்வின்போது வலியுறுத்தி உரையாற்றினார்.



கிழக்கு மாகாணசபையின் அமர்வு இன்று காலை பிரதித் தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா தலையில் இடம்பெற்றபோது முதலமைச்சர் மேற்கண்டவாரு உரையாற்றினார்:

மேலும் அவர் அங்கு கூறுகையில்:

நீண்ட காலம் புரையோடிப்போயிருந்த இனப்பிரச்சனைக்கு ஓரளவேனும் தீர்வைக்கானும் வகையில் கொண்டுவரப்பட்ட இந்தத் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு கடந்த கால அரசுகள் பின்னின்றன. அத்துடன் இது சம்மந்தமாக சிறுபான்மைச் சமூகங்களும் அவர்களைப் பிரதிநித்துவப்படுத்தும் கட்சிகளும் பல்வேறு கோரிக்கைகளை விடுத்திருந்தபோது அவற்றை செவிமடுக்காது இழுத்தடிப்புச் செய்தனர்.

அதிகார பரவலாக்கல் என்ற அம்சத்தை கொண்டுவரும் நோக்கிலேயே இந்த திருத்தம் கொண்டுவரப்பட்டது. இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்திக்கும் இலங்கை ஜனாதிபதி ஜேஆர் ஜெயவர்தனவுக்குமிடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இணக்கம் காணப்பட்டபின்னரே இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இதன்மூலம் சிறுபான்மைச் சமூகங்களுக்கு விமோசனம் கிடைக்குமென பல்வேறு மட்டங்களிலும் எதிர்பார்க்கப்பட்ட போதும் அது சரிவர நிறைவேற்றப்படாமையானது வேதனையான ஒன்றே. 

இன்று வடக்கு கிழக்கில் சமூகங்களுக்கிடையில் முறன்பாடுகளைத் தோற்றுவித்துள்ள காணிப்பிரச்சனையை முடிவுக்குக் கொண்டுவர இலங்கை இந்திய ஒப்பந்தம் நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டியதன் அவசியத்தையும் முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் வலியுறித்தினார். 

அத்துடன் கிழக்கு மாகாண சபை நல்லாட்சிக்கு எடுத்துக்காட்டாக விழங்குவதை ஞாபகப்படுத்திய அவர் மாகாணசபை ஆட்சி அதிகாரங்கள் மூவினங்களுக்கிடையே முறையாகப் பகிரப்பட்டுள்ளாதாக சுட்டிக்காட்டினார்.

அமைச்சரவையில் உள்ள தமிழ் சகோதரர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் இதனை ஏற்றிருப்பதையும் அவர் நினைவு படுத்தினார். கடந்தகால மாகாண அரசு போலன்றி தற்போது பதவியில் இருக்கும் மாகாண அரசு நேரினையையும் வெளிப்படைத்தன்மையையும் இதய சுத்தியையும் கொண்டு இயங்குவதை ஒவ்வொருவரின் மனச்சாட்சியைத் தொட்டுப்பார்த்தால் விளங்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

அபு அலா -

Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2