Published On: Wednesday, September 16, 2015
பெற்றாருக்கு விழிப்புணர்வூட்டும் பேரணி
சிறுவர்களுக்கு கல்வி கற்க சந்தர்ப்பம் வழங்கப்படவேண்டியதன் கட்டாயம்; குறித்து பெற்றாருக்கு விழிப்புணர்வூட்டும் பேரணியொன்று ஓட்டமாவடியில் இன்று நடைபெற்றது.
பாடசாலை மாணவர்கள் கல்வித்திணைக்கள அதிகாரிகளும் இப்பேரணியில் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் முறைசாராக் கல்விப்பிரினால் ஏற்பாடுசெய்யப்பட்ட இப்பேரணி ஓட்டமாவடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலை முன்றலிலிருந்து ஆரம்பமாகி, மட்டக்களப்பு -கொழும்பு பிரதான வீதிவழி ஓட்டமாவடி நாற்சந்தி சுற்றுவட்டத்தினூக சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரத்தைக் கடந்து மீண்டும் அப்பாடசாலையை அடைந்தது.
அங்கு மாணவர் நிகழ்ச்சிகள் மற்றும் தேசிய எழுத்தறிவு தினத்தையொட்டி பாடசாலை மாணவர்கள் மத்தியில் நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசில்கள் வழங்கும் நிகழ்வுகளும் நடைபெற்றன.
மட்டக்களப்பு மத்தி கல்வி வலய முறைசாராக்கல்விப்பணிப்பாளர் ஏஎல்எம் ஷரீப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வலயக்கல்விப் பணிப்பாளர் எம்ஐ. சேகுஅலி, பிரதிக்கல்விப் பணிப்பாளர்களான எம்ரீஎம் அஷ்ரப், எம்எம் இஸ்மாலெப்பை,உதவிக்கல்விப் பணிப்பாளர் எம்எஸ். கலீலுர்ரகுமான்,கோட்டக் கல்விப் பணிபப்hளர் ஏஎல்.மீராசாஹிபு,சமாதானக்கல்வி இணைப்பாளர் எம் ஜி ஏ நாஸர் மற்றும் பாடசாலை அதிபர் எம்எல்ஏ. ஜுனைட் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
(ஏறாவூர் நிருபர்)ஏ எம் றிகாஸ்