Published On: Wednesday, September 16, 2015
அமைதிப் பேரணி
மேல் மாகாண சபை உறுப்பினரும், தேசிய ஐக்கிய முன்னனியின் தலைவருமான ஆஸாத் சாலிக்கு தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டுமென்று வலியுறுத்தி ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மீறாவோடையில் அமைதிப் பேரணி இடம்பெற்றது.
நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலின் போது ஆஸாத் சாலி தேர்தலில் போட்டியிடுவதற்கு சந்தர்ப்பம் கேட்ட வேளை தேர்தலில் போட்டியிட வேண்டாம் உங்களுக்கு தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுமென்ற ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தினால் வழங்கப்பட்ட உறுதி மொழிக்கேற்ப ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிக்காக அவர்களது தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டிருந்தார்.
இருந்தும் அவருக்கு கொடுத்த வாக்குறுதி போல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படவில்லை. அவருக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட வேண்டும் என்று பேரணியில் கலந்து கொண்டடோர் கருத்து தெரிவித்தனர்.
கல்குடா இளைஞர் அமைப்பின் தலைவர் எச்.எம்.நிஜாம்தீன் தலைமையில் இடம்பெற்ற இப்பேரணி மீறாவோழ் நிஸ்வான் பள்ளிவாயல் சந்தியிலிருந்து ஆரம்பித்து மீறாவோடை ஓட்டமாவடி எல்லை வீதி வரை சென்றது.
ந.குகதர்சன்,
வாழைச்சேனை நிருபர்