Published On: Tuesday, September 15, 2015
இலங்கை கண் வைத்தியசாலையின் உப பணிப்பாளராக காத்தான்குடிய சேர்ந்த வைத்திய கலாநிதி ஐ.எல்.எம்.றிபாஸ் நியமனம்
துறைசார் கலாநிதி இறுதி பரீட்சையில் சித்திபெற்று இலங்கை தேசிய கண் வைத்தியசாலையின் உப பணிப்பாளராக வைத்திய கலாநிதி ஐ.எல்.எம்.றிபாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். வைத்திய கலாநிதி ஐ.எல்.எம்.றிபாஸ் மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பிரதேசத்தை பிறப்பிடமாக கொண்ட இவர் சிறந்த அரசியல், சமூக கட்டுரை எழுத்தாளருமாவார்..
தனது பதவியை பெற்றுக்கொண்டபின் தனது முகநூலில்.
“அல்ஹம்துலில்லாஹ். துறைசார் கலாநிதி இறுதி பரீட்சையில் சித்திபெற்று
இலங்கை தேசிய கண் வைத்தியசாலையின் உப பணிப்பாளராக உத்தியோகபூர்வமாக இன்று பணிகளைப் பொறுப்பேற்றேன்”
“அல்லாஹ்வுக்கும் எனதருமைப் பெற்றோருக்கும், என்னுடன் பொறுமைகாத்து உறுதுணையாக ஒத்துழைப்பு நல்கிய மனைவி மக்களுக்கும் உடன் பிறப்புகளுக்கும், கண்கண்ட மற்றும் கண்காணாத ஆசிரியர்களுக்கும், உயிர் தோழர்களுக்கும் என்னை வளர்த்தெடுத்த தாய் மண்ணுக்கும் நன்றிகள் பல கோடி” என பதிவிட்டு நன்றி தெறிவித்திருந்தார்.
காத்தான்குடி மண்ணிற்கு புகழ் பெற்றுக்கொடுத்த வைத்திய கலாநிதி ஐ.எல்.எம்.றிபாஸ் அவர்களுக்கு எமது வாழ்த்துக்கள்...
(ஜுனைட்.எம்.பஹ்த்)