Published On: Wednesday, September 16, 2015
எவர் அமைச்சராக வந்தாலும் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் அஸ்வான் சக்காப் மௌலானா
கடந்த பாராளுமன்ற பொதுத்தேர்தலின் போது வெற்றிப்பெற்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து ஒரே குடையின் கீழ் நின்று செயற்பட வேண்டும். இவ்வாறு கூறுகிறார் கல்முனை தொகுதி ஐ.தே.கட்சி பிரச்சார செயலாளரும் முஸ்லிம் சமய கலாச்சார அமைச்சின் இணைப்பாளருமான அஸ்வான் சக்காப் மௌலானா. அண்மையில் நடைபெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் அபிவிருத்தி சம்பந்தமான ஐ.தே.கட்சி அதிமுக்கிய உறுப்பினர்களுடன் கலந்துரையாடலின் போது கூறியதாவது:
கடந்த காலங்களில் நீண்ட காலமாக அம்பாறை மாவட்டத்தில் எதுவித அபிவிருத்தியும் இடம்பெறவில்லை கூடுதலான இளைஞர்இ யுவதிகள் வறுமைக்கோட்பாட்டில் வாழ்ந்து வருவதை காணக்கூடியதாக உள்ளது அவர்களுக்கான தொழில்வாய்ப்புக்களையும் ஏற்படுத்தி கொடுக்கவேண்டும். மீனவர்களின் வாழ்வாதாரம் உறுதிப்படுத்தபடவேண்டும். வீடற்றவர்களை இணங்கண்டு அவர்களுக்கு வீட்டுவசதிகளை ஏற்படுத்தி கொடுக்கவேண்டும். பாடசாலைகளில் உள்ள குறைநிறைகளை நிவர்த்திசெய்யவேண்டும். பாதைகள் செப்பணிடப்பட வேண்டும் குறைந்த வருமாணம் உள்ளவர்களுக்கு கடன்வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கவேண்டும். நீண்டகாலமாக தூர இடங்களில் அரச ஊழியர்கள் கடமையாற்றி இருப்பவர்களை சொந்த இடங்களுக்கு மாற்றப்பட வேண்டும். விவசாயிகளின் பிரச்சினைகள் தீரக்கப்பட வேண்டும். கைத்தொழில் பேட்டைகள் அமைக்கப்படல் வேண்டும.; வைத்தியசாலைகளில் உள்ள பிரச்சினைகள் உடனடியாக தீர்க்கப்படல் வேண்டும்.
ஆகவே எமது நல்லாட்சியின் அரசை கொண்டு அனைத்து உறுப்பினர்களும் சமூக சேவையாளனாக மாற வேண்டும். சமூகத்துக்கு எமது உழைப்பாக வரவேண்டும் இன்னும் இன்னும் நாங்கள் தலை குனிய கூடாது. அம்பாறையில் கிடைத்த சந்தர்ப்பம் இனியும் கிடைக்குமா? என்பதை முன்னிருத்தி செயற்பட்டால் நிச்சயம் எதிர்காலம் உங்களது கைகளில் உள்ளது. கட்சி பேதமின்றி செயற்பட அணைவரும் கைகோர்க்கவேண்டும் இவ்வாறு கூறினார் அஸ்வான் சக்காப் மௌலானா
எம்.வை.அமீர்