Published On: Thursday, March 14, 2013
முதிரை மரங்களை எடுத்து சென்ற கிராம அதிகாரிக்கு விளக்க மறியல்
( புத்தளம் செய்தியாளர் )
சட்ட விரேதமாக வெட்டப்பட்ட முதிரை மரங்களை லொறியொன்றில் எடுத்து வந்த கிராம அதிகாரி ஒருவரையும் லொறி சாரதியையும் இம் மாதம் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு ஆனமடு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஸாலியவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இஹலபுளியங்குளம மீகஸ்வெவ வனப் பிரதேசத்தில் 19 குற்றி முதுரை மரங்களை லொறியில் எடுத்துச் சென்ற போது கிராம அதிகாரி ஒருவரையும் லொறி சாரதியையும் இன்று அதிகாலை புளியங்குளம் பிரதேசத்தில் வைத்து சாலியவெவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.குறித்த வனப் பிரதேசத்திலிருந்து முதுரை மரங்களை எடுத்துச் செல்வதாக சாலியவெவ பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து இந்த கைது இடம் பெற்றுள்ளது கருவலகஸ்வெவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியில் கடமைபுரியும் கிராம அதிகாரியும் கருவலகஸ்வெவ 17ஆம் மைல் பகுதியில் வசிக்கும் ஒருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர். . மரக்குற்றிகளையும் அவற்றை எடுத்துச் சென்ற லொறியையும் சாலியவெவ பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
