Published On: Wednesday, March 13, 2013
போராடும்படி புத்தபெருமான் போதிக்கவில்லை : சமித தேரர்

புத்த பெருமான் குரோதத்தின் மூலம் குரோதத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என போதித்திருந்தும், சில இயக்கங்கள் (சேனாக்கள்) வாள், தடி போன்றவற்றைத் தூக்கிக் கொண்டு போருக்கு ஆயத்தமாகியுள்ளன என தென் மாகாண சபை உறுப்பினர் பத்தேகம சமித்த தேரர் குறிப்பிடுகிறார்.
சகல செயற்பாடுகளுக்கும் மாற்றுச் செயற்பாடுகள் உள்ளனவென்றும், இவ்வாறான கொடிய செயற்பாடுகளால் எண்ணவியலாத பெரும் பிரச்சினை தோன்றலாம் எனவும் அவர் தெளிவுறுத்துகிறார்.