Published On: Wednesday, March 13, 2013
இலங்கை முஸ்லிம்களின் நிலை குறித்து பாகிஸ்தானிடம் முறைப்பாடு
முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து பாகிஸ்தான் தூதுவரிடம் முறைப்பாடு செய்ததாக தமிழ் முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் செயலாளரான அசாத் சாலி தெரிவித்துள்ளார்.
ஜெனிவாவில் நடக்கும் ஐ.நா. மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கை முஸ்லிம்கள் விவகாரம் பற்றிய பேச்சுக்களின்போது, பாகிஸ்தானும், இந்தோனீசியாவும் ''இலங்கையில் முஸ்லிம்களுக்கு எந்த விதமான பிரச்சினையும் கிடையாது'' என்ற வகையில் பேசியதாக கூறிய அசாத் சாலி, அது தவறு என்றும் அவர்களுக்கு அதுகுறித்து விளக்கும் வகையில் இலங்கைக்கான பாகிஸ்தானின் புதிய தூதுவரைக் கண்டு தாம் பேசியதாகக் கூறியுள்ளார்.
இலங்கையில் முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள் இடிக்கப்படும்போது, அவர்கள் ஹலால் போன்ற பல பிரச்சினைகள் எதிர்கொள்ளும்போது அந்த இரு நாடுகளும் இவ்வாறு பேசியது தவறு என்று கூறும் அவர், ஆகவே அதுகுறித்து இந்த நாடுகள் ஐ.நா.வில் சரியான கருத்துக்களை முன்வைக்கவேண்டும் என்று பாகிஸ்தான் தூதுவரிடம் தாம் கேட்டதாக தெரிவித்தார்.
(பி.பி.சி.)