எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Wednesday, March 13, 2013

அம்பாறை மாவட்டத்தில் இம்முறை கரும்புச் செய்கை அதிகரிப்பு

Print Friendly and PDF


அம்பாறை 9ஆம் கட்டை இழுக்குச்சேனை பகுதியிலுள்ள சுமார் 350 ஏக்கருக்கு மேற்பட்ட கரும்புச் செய்கைக் காணிகளில் சுமார் 250 ஏக்கரில் இம்முறை கரும்புச் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.


இம்முறை மேற்கொள்ளப்பட்டுள்ள இக்கரும்புச் செய்கையின் அரைவாசி விதைக் கரும்புக்கும், மற்றைய அரைவாசி சீனிக்காகவும் செய்கை பண்ணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கபடுகின்றன. விதைக் கரும்புச் செய்கையின் அறுவடை இன்னும் ஓரிரு மாதங்களின் பின்னர் இடம்பெறவுள்ளதாகவும், சீனிக்காக செய்கை பண்ணப்பட்ட கரும்புகள் இன்னும் 6 மாதங்களின் பின்னர் அறுவடை செய்யப்படவுள்ளதாகவும் கரும்புச் செய்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இழுக்குச்சேனை 174/31 கண்டம் மற்றும் 9ஆம் கட்டை 173 கண்டம் ஆகிய கண்டங்களில் கரும்புச் செய்கையை மேற்கொண்டுள்ள கரும்புச் செய்கையாளர்கள் கருத்து தெரிவிக்கையில்;

விவசாயம் செய்பவர்களுக்கு பல வகையான கஷ்டங்களும், நஷ்டங்களும் உண்டாகுவதைப்போல் கரும்புச் செய்கையில் எந்த விதமான நஷ்டங்களும் கஷ்டங்களும் ஏற்படுவதில்லை. மாறாக கரும்புச் செய்கை பண்ணப்பட்ட மூன்று மாத காலங்களுக்குள் இக்கரும்புகளை சூழவுள்ள புற்பூண்டுகளை அகற்றி துப்பரவு செய்துவிட்டால் போதுமானதாகும்.

விதைக்காக செய்யப்படும் அதாவது ஸீக்கன் என அழைக்கப்படும் கரும்புச் செய்கையானது 6 மாத காலங்களின் பின்னர் அறுவடை செய்யப்படுவதாகவும், சீனிக்காக செய்யப்படும் கரும்புச் செய்கையானது 11 மாதங்களின் பின்னரும் அறுவடை செய்யப்படுகின்றன. இதில் முதல் முறையாக செய்யப்படும் கரும்புச் செய்கையாவும் விதைக்காகவும், பிந்தி 5 வருட காலத்துக்கு செய்கை பண்ணப்படும் கரும்புச் செய்கையாவும் சீனிக்காகவும் செய்யப்படுகின்றன.


இவ்விதைப்புக்கள் யாவும் 5 வருடத்துக்கு ஒரு முறைதான் விதைக்கப்படுவதாகவும், இவ்வாறு செய்கை பன்னப்படும் கரும்புச் செய்கையில் ஒன்றுக்கொன்று இலாபம் கிடைப்பதாகவும் வருப்பத்தாஞ்சேனையைச் சேர்ந்த ஏ.பி.அப்துல் றஹ்மான் என்ற கரும்புச் செய்கையாளர் சுட்டிக்காட்டினார்.

விதைக் கரும்பு ஒரு தொண் 3500 ரூபாவாகவும், சீனிக்கரும்பு ஒரு தொண் 4000 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதும் குறிப்பிடத்தக்கதாகும்.

(எம்.பைஷல் இஸ்மாயில்)

Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2