எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Wednesday, March 13, 2013

தேசத்துக்கு மகுடம் கண்காட்சியை முன்னிட்டு அபிவிருத்திகள் மும்முரம்

Print Friendly and PDF


இந்த வருடம் தேசத்துக்கு மகுடம் கண்காட்சியை முன்னிட்டு அம்பாறையில் பல அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மிகத் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


எதிர்வரும் 23ஆம் திகதி சனிக்கிழமை அம்பாறையில் ஆரம்பிக்கவுள்ள 2013 தேசத்துக்கு மகுடம் கண்காட்சி 29 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை இடம்பெறவுள்ள இந்த கண்காட்சி அம்பாறை ஹாடி தொழில் நுட்பவியல் கல்லூரியில் ஒரு வாரகாலத்துக்கு இடம்பெறவுள்ளன.

இக்கண்காட்சியையெட்டி அம்பாறையிலிருந்து செல்லும் கல்முனை, அக்கரைப்பற்று, கண்டி ஆகிய பிரதான வீதிகள் மற்றும் உள்ளக வீதிகள் யாவும் காபட் வீதிகளாக மாற்றியமைக்கப்பட்டு வருவதோடு, அம்பாறை ஹாடி தொழில் நுட்பவியல் கல்லூரி மற்றும் அதைச் சூழவுள்ள பகுதியில் பல அபிவிருத்திப் பணிகள் மிகத்துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.



அம்பாறை ஹாடி தொழில் நுட்பவியல் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டு வரும் இந்த 2013 தேசத்துக்கு மகுடம் கண்காட்சியை ஆரம்பித்து வைப்பதற்காக நாட்டின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.

(எம்.பைஷல் இஸ்மாயில்)

Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2