எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Wednesday, March 27, 2013

தயட்ட கிருள கண்காட்சிக்கு முஸ்லிம்களின் வரவில் வீழ்ச்சி; 10 இலட்சம் பேர் பங்கெடுப்பு

Print Friendly and PDF


இலங்கையின் ஏழாவது தேசத்துக்கு மகுடம் கண்காட்சி அம்பாறை ஹாடி உயர் தொழில் நுட்பக்கல்லூரி வழாகத்தில் இடம்பெற்று வருகின்றது. இக்கண்காட்சி கடந்த சனிக்கிழமை ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட நாள் முதல் இன்று புதன்கிழமை வரை மிக வெற்றியுடன் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

கடந்த சனிக்கிழமை தொடர்க்கம் நேற்றுவரை நான்கு நாள் கண்காட்சியின் போது 10 இலட்சம் பொதுமக்கள் இக்கண்காட்சியை கண்டு களித்திருப்பதாகவும் அதிலும் விஷேடமாக நான்காம் நாளான செவ்வாய்க்கிழமை மாத்திரம் ஐந்து இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் கண்காட்சியினை கண்டுகளித்துள்ளதாகவும் இக்கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

தேசத்துக்கு மகுடம் கண்காட்சியை கண்டுகளிக்க மிகக் குறைந்த முஸ்லிம் மக்கள் வருகை தந்திருந்ததாகவும், தாம் எதிர்பார்த்த பெரும்தொகையான மக்கள் வருகை தரவில்லையெனவும் தெரிவித்த ஏற்பாட்டாளர்கள், தற்போது 10 இலட்சத்துக்கும் அதிகம் மக்கள் பங்கேற்றுக் கொண்டதும் மிகப்பாரிய வெற்றியாகும் எனவும் இதனை நுழைவுச்சீட்டு விற்பனையில் இருந்து அறியக் கிடைத்திருப்பதாகவும்  ஏற்பாட்டாளர்கள் மேலும் தெரிவித்தனர்.

(எம்.பைஷல் இஸ்மாயில்)

Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2