Published On: Saturday, March 16, 2013
ஏப்ரல் மாத இறுதியில் அமைச்சரவையில் மாற்றங்கள்?

எதிர்வரும் ஏப்ரல் மாத இறுதியில் அமைச்சரவையில் சிறியளவிலான மாற்றங்கள் ஏற்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அரச உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 29 பிரதியமைச்சுப் பதவிகளில் 12 வெற்றிடங்கள் நிரப்பப்படவுள்ளதாகவும் இதற்காக புதிதாக பிரதியமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.