எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Saturday, March 16, 2013

தம்புள்ளை பிக்கு ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடமாக மீட்பு

Print Friendly and PDF


தம்புள்ள பௌத்த விகாரையொன்றின் பிக்கு ஒருவர் கழுத்தில் சுருக்கிட்டுத் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சிகிரிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

நேற்று வெள்ளிக்கிழமை தம்புள்ள, கண்டலம பிம்பாராமய விகாரையின் அறையொன்றினுள் கூரை முகட்டில் கட்டப்பட்டிருந்த கயிற்றினால் கழுத்தில் சுருக்கிடப்பட்டுத் தொங்கிய நிலையில் ஹிங்குராங்கொட ஸத்தானநந்த தேரர் (53 வயது) என்ற பிக்குவின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டது.

இவ்வாறு மீட்கப்பட்ட பிக்குவின் சடலம் தம்புள்ள டென்சில் கொப்பேகடுவ வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த பிக்குவின் சடலத்தின் முழங்கால்கள் தøரையை தொட்டவாறு காணப்பட்டதை தொடர்ந்து இது கொலையாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் தொடர்பில் சிகிரிய பொலிஸார் மாத்தளை மாவட்ட பொலிஸ் அத்தியட்சருக்கு அறிவித்ததைத் தொடர்ந்து, மாத்தளையிலிருந்து வருகை தந்த விஷேட பொலிஸ் குழுவினர் தீவிர விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2