Published On: Saturday, March 16, 2013
மோட்டார் சைக்கிளுடன் மோதியவர் தப்பியோட்டம்: தந்தை, மகன் படுகாயம்
காரைதீவு பிரதான வீதியில் நேற்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் நற்பிட்டிமுனையைச் சேர்ந்த தந்தையும், மகனும் படுகாயமடைந்த நிலையில் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்மாந்துறையிலிருந்து நற்பிட்டிமுனையை நோக்கி மோட்டார் வாகனத்தில் வந்துகொண்டிருந்த தந்தையும், மகனும் மாவடிப்பள்ளி தாம்போதி தாண்டி சென்று கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்தவர் மோதியுள்ளார். விபத்து நடந்தவுடன் அவர் உடனடியாக தப்பிச் சென்றுள்ளார்.

வீதியின் அருகிலிருந்த வயல் பகுதியில் விழுந்து கிடந்த நிலையில் விபத்துக்குள்ளான தந்தையும், மகனும் பாதசாரிகளால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து சம்பந்தமான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(எஸ்.அஷ்ரப்கான்)