Published On: Sunday, March 17, 2013
மயிலம்பாவெளியில் வீதியைக் கடக்க முற்பட்ட சிறுவன் விபத்தில் பலி

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மயிலம்பாவெளி பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை வீதியால் பயனித்த வாகனத்தில் அடிப்பட்டு சிறுவனொருவன் உயிரிழந்துள்ளார்.
மைலம்பாவெளி பிரதேசத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட முச்சக்கரவண்டியினுள் விளையாடிக் கொண்டிருந்த முத்துக்குமாரன் நிலக்ஸன் என்ற சிறுவனே எதிர்பாராத விதமாக வீதியை கடக்க முற்பட்டவேளை வீதியால் வந்த கென்டர் ரக வாகனமொன்றில் மோதுண்டு மரணித்துள்ளார்.
சிறுவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக ஏறாவூர் தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனையின் பின் சடலம் தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(ந.குகதர்சன்)