எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Sunday, March 31, 2013

அயலவர்களுக்கு இடையிலான வாய்த்தர்க்கம் கொலையில் முடிந்தது

Print Friendly and PDF


அக்கரைப்பற்று, ஆலின் நகர் பிரதேசத்தில் அயலவர்களுக்கிடையே இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேற்படி உயிரிழந்தவர் அக்கரைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்த சுலமா லெப்பை ஜெலில் (வயது 42) என்பவராவர்.

உயிரிழந்தவர் நேற்று முன்தினம் இரவு 12.30 மணியளவில் அயலவர் மூவருக்கிடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இதன்போது இருவர் சேர்ந்து ஒருவரை தாக்கியுள்ளனர். இதன் காரணமாக உயிரிழந்த சுலைமாலெப்பை ஜெலீல் பலத்த காயங்களுடன் அக்கரைப்பற்று அதார வைத்தியசாலையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார். 

எனினும் அவருக்கு அவசர சிகிச்சை வழங்கப்பட்டும் எவ்வித பலனின்றி நேற்று அதிகாலை உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

(எம்.பைஷல் இஸ்மாயில்)

Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2