எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Tuesday, April 16, 2013

அமெரிக்காவில் தொடர் குண்டு வெடிப்பு! தீவிரவாத தாக்குதல் அறிவிப்பு!!

Print Friendly and PDF



 அமெரிக்காவின் பொஸ்டன்  நகரில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்புகள் அங்குள்ளவர்களை அதிர வைத்துள்ளன. பொ ஸ்ட்டன் நகரில்  மரதன் ஓட்ட  போட்டி நடந்து, போட்டி முடியும் நேரத்தில் ‌வெடிகுண்டுகள் வெடித்தன. இதில், 3 பேர் பலியானார்கள் மேலும் 140 பேர்வரை காயமாடைந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

குண்டுவெடிப்புகள், தீவிரவாதிகளின் கைவரிசை என அமெரிக்க உள்ளக உளவுத்துறை எஃப்.பி.ஐ. கூறியுள்ளது.
பொஸ்டன்  நகரில் மரதன்  போட்டி முடியும் நேரத்தில் முதலாவது குண்டு வெடித்தது. மக்கள் அதிர்ச்சி அடைந்து சிதறி ஒடினர். அடுத்த சில நிமிடங்களில் மற்றொரு குண்டுவெடிப்பு நிகழ்‌ந்தது. தொடர்ந்து 3வது குண்டுவெடிப்பு ஜே.எப்.கென்னடி நூலகம் அருகே வெடித்தது.

இதனை‌யடுத்து அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, நாட்டின் முக்கிய நகரங்களில் பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவிட்டுள்ளார்.
பொஸ்டனில் நடைபெற்ற மரதன்  மிகவும் தொண்மை வாய்ந்தது மற்றும் புகழ்‌பெற்றது. இந்த ஆண்டு சுமார் 23,000 பேர் கலந்துகொண்ட போதே ‌குண்டு வெடிப்பு நடந்தது. போட்டி முடியும் இடம் அருகேயுள்ள குபிளாசா நட்சத்திர ஹோட்டல் அருகே குண்டு வெடிப்பு நடந்தது.

வெ‌டிக்க வைக்கப்பட்ட வெடிகுண்டுகள், நடுத்தர அளவிலான, உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவை என பொஸ்டன்  பொலிசார் தகவல் தெரிவித்துள்ளனர் . காயமடைந்தவர்களில் 25லிருந்து 30 பேர் வரை ஒரு கால் மற்றும் இரு கால்களை இழந்திருப்பதாக டாக்டர்கள் த‌கவல் தெரிவித்துள்ளனர்.

இந்த தொடர் குண்டுவெடிப்பை அடுத்து, பொஸ்டன்  நகருக்கு வரும் விமானங்கள், வேறு நகரங்களுக்கு திருப்பி விடப்பட்டன. பொஸ்டனில்  இருந்து கிளம்ப வேண்டிய விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
பொஸ்டன்  தொடர் குண்டு தாக்குதலால் நியூயார்க், மற்றும் வாஷிங்டனில் பாதுகாப்பு கடுமையாக பலப்படுத்தப்பட்டுள்ளது. மற்றைய நகரங்களிலும், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என அமெரிக்க ராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.




Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2