Published On: Tuesday, April 23, 2013
அனல் மின்நிலைய விவகாரம்: புத்தளத்தில் பொது மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
நுரைச்சோலை அனல் மின் நிலையத்திலிருந்து புத்தளம் களப்பினூடாக எடுத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாக் கூறப்படும் மின் கம்பிகளை புத்தளம் களப்பினூடாக எடுத்துச் செல்லக் கூடாது என்று கூறி இன்று புத்தளத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இடம் பெற்றது.

வளர் பிறை , ஸ்டார், அம்பர் மீனவர் கூட்டுறவு
சங்கங்கள் ஆகிய மூன்று சங்கங்களும் இணைந்து இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டதினை
ஏற்பாடு செய்திருந்தது. மர்ஹும் பிஸ்ருல் ஹாபி ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு
வருகை தந்த வடமேல் மாகாண கடற் தொழில் அமைச்சர் சனத் நிஷாந்த பெரேராவிடம்
மூன்று மீனவ சங்கங்களும் மகஜரை கையளித்தனர். புத்தளம் கொழும்பு முகத்திலில் இடம் எதிரப்பு ஆர்ப்பாட்டம் இடம் பெற்றது.




