எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Tuesday, April 02, 2013

குனூத் அந்நாஸிலா ஓதுவதை நிறுத்துங்கள்: உலமாசபை அதிரடி அறிவிப்பு

Print Friendly and PDF


முஸ்லிம்கள் தொழுகையில் ஓதிவருகின்ற குனூத் அந்நாஸிலாவை உடனடியாக நிறுத்துமாறு ஜம்மியத்துல் உலமாசபை முஸ்லிம்களுக்கு அறிவித்தல் விடுத்துள்ளது.

இதுகுறித்து ஜம்மியத்துல் உலமாசபையின் செயலாளர் எம்.எம்.ஏ. முபாறக் அனுப்பிவைத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;

அண்மைக்காலமாக நாட்டில் இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான பல்வேறு நடவடிக்கைகள் சகலரையும் பாதிப்புள்ளாக்கியதோடு, நாட்டின் அமைதிக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக அமைந்தது. அந்நடவடிக்கைகள் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் இம்சைப்படுத்தியதுடன் அவர்களது அன்றாட வாழ்வையும் பெரிதும் பாதித்தது. 

ஆபத்தான நிலைமைகளில் றஸுல் (ஸல்) அவர்கள் குனூத் அந்நாஸிலாவை ஓதி வந்தார்கள். அதன் ஒளியில் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண நிலைமையைக் கவனத்திற்கொண்ட அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா முஸ்லிம்களினதும் நாட்டினதும் பாதுகாப்பு மற்றும் அமைதிக்காக ஐவேளை தொழுகைகளிலும் குனூத் அந்நாஸிலாவை ஓதி வருமாறும், சுன்னத்தான நோன்புகளை நோற்குமாறும் அனைத்து முஸ்லிம்களையும் வேண்டியிருந்தது. 

ஜம்மியயாவின் வழிகாட்டலை ஏற்று நம்மக்கள் சுன்னத்தான் நோன்புகளை நோற்று பிரார்த்தனை செய்து வந்ததோடு குனூத் அந்நாஸிலாவையும் தமது தொழுகைகளில் ஓதி வந்தனர். தற்பொழுது குனூத் அந்நாஸிலாவைத் தொடர வேண்டிய அவசியம் உணரப்படாமையினால் அதனை நிறுத்திக் கொள்ளலாம் என்று அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா தெரிவித்துக்கொள்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குனூத் அந்நாஸிலா என்பது நாட்டில் முஸ்லிம்களுக்கு அச்சம் ஏற்பட்டால் அல்லது அச்சுறுத்தல்கள் ஏற்பட்டால் ஓதுகின்ற ஒரு துஆ ஆகும். ஆனால், தற்போது இலங்கையில் முஸ்லிம்களுக்கு எந்தவிதமான பிரச்சினை இல்லை. முஸ்லிம்கள் நிம்மதியாக வாழ்வதினால் குனூத் அந்நாஸிலாவை ஓதவேண்டிய தேவை இல்லையென்றும் ஜம்மியத்துல் உலமா அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

(முஹம்மட் பிறவ்ஸ்)

Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2