Published On: Tuesday, April 02, 2013
புதுவருடத்தின் பின்னர் தனியார் பஸ் கட்டணங்கள் அதிகரிக்கும்

புதுவருட கொண்டாட்டத்தின் பின் பஸ் கட்டணங்கள் யாவும் அதிகரிக்கப்படும் என தனியார் போக்குவரத்து அமைச்சு திங்கட்கிழமை தெரிவித்துள்ளது.
இதனால் பஸ் கட்டணங்கள் எப்ரல் 15ஆம் திகதிக்கு பின்னர் 7 சதவீதத்தினால் அதிகரிக்கும் எனவும் இதில் ஆகக் குறைந்த கட்டணமாக ஒன்பது ரூபாவாக தொடர்ந்து இருக்கும் எனவும் அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும் போக்குவரத்து அமைச்சர் பஸ் கட்டண அதிகரிப்புக்கான திகதியை இன்னும் அங்கீகரிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
(எம்.பைஷல் இஸ்மாயில்)