Published On: Monday, April 08, 2013
முஸ்லிம் இலக்கிய மாநாடு: நாடுபூரான கலந்துரையாடல்கள் விரைவில்

முஸ்லிம் இலக்கிய அடையாளத்தினுள் பிரதானமான ஒரு பிரிவாக இஸ்லாமிய இலக்கியத்தை வைத்துக்கொண்டு ஏனைய எல்லா இலக்கிய வகைகளையும் அதன் உள்ளடக்கங்களையும் வரையறுத்து வடிவமைத்து முஸ்லிம் இலக்கிய மாநாட்டை முன்னெடுப்பதற்கான நாடுபூரான கலந்துரையாடல்களை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
முஸ்லிம்களின் இலக்கிய தனித்துவ அடையாளம் இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் என்ற நிலையிலேயே இன்றுவரை அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றது. இதன் தொடர்ச்சியைப் பாதுகாப்பதிலும் நவீன இலக்கியங்களை இதனுள் அடக்குவதிலும் நாம் எதிர்நோக்குகின்ற மிக முக்கியமான பிரச்சினை அவற்றிற்கு இஸ்லாமியத் தமிழ் இலக்கிய அங்கீகாரத்தினை வழங்குவதில்தான் தங்கியுள்ளது.
இஸ்லாத்தை தமிழில் எழுதுகின்றபோது பெறப்படுவதே இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் என்ற வரையறையுடன் வைத்துப் பார்க்கும்போது, எழுதுகின்றவரின் அடையாளத்தைவிட அவர் எழுதியதிலுள்ள பொருள்தான் இங்கு முக்கியமானதாகக் கருதப்படுகின்றது. இதனால் இஸ்லாமிய அறநெறிகளுக்குட்பட்டு எழுதாத சமூக வாழ்வியல் இலக்கியங்களை நாம் எங்கு சென்று அடையாளப்படுத்துவது என்கின்ற கேள்விக்கு முறையான ஒரு பதிலாகவும் வடிவமாகவும் தோற்றம் பெறுவதுதான் முஸ்லிம் இலக்கியம் என்கின்ற நமக்கான புதிய தனித்துவ அடையாளம்.
இதற்கான உங்களது ஆலோனைகளும் ஒத்துழைப்புக்களும் பெறுமதியான ஒரு தேவைப்பாடாக எமக்கு அமைவதனால் எம்மோடு இதுதொடர்பில் தொடர்ந்தும் செயற்படும் வகையில் நீங்கள் முஸ்லிம் இலக்கிய மாநாடு தொடர்பான கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள். இது எமக்கானதல்ல நமது பரம்பரையின் மற்றுமொரு தொடர்ச்சிக்காக. தொடர்புகளுக்கு: நவாஸ் சௌபி 0776401296, 0718217910, 0672224420