Published On: Monday, April 08, 2013
மாதம்பை இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரிக்கான புதிய மாணவர் அனுமதி

மாதம்பை இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரியின் புதிய மாணவர் அனுமதிக்கான எழுத்து மற்றும் நேர்முகப்பரீட்சைகள் மே மாதம் 4ஆம் 5ஆம் திகதிகளில் கல்லூரி வளாகத்தில் நடைபெறுமென கல்லூரி அதிபர் உஸ்தாத் எம்.யூ.எம் றம்ஸி தெரிவித்தார்.
இக்கற்கை நெறியானது இரண்டு கட்டங்களைக் கொண்டதாகும். முதலாம் கட்டம் 3 வருடங்களைக் கொண்டதாகவும் இரண்டாம் கட்டம் 4 வருடங்களைக் கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. மூன்று வருடங்களைக் கொண்ட முதலாம் கட்டத்திற்காக இவ்வருடம் மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர். இவர்கள் ஷரீஆ பாடங்களுடன் கலை மற்றும் வர்த்தகத்துறையில் க.பொ.த. உயர்தரக் கல்வியைத் தொடர வாய்ப்பளிக்கப்படுவார்கள்.
விண்ணப்பதாரிகள் 1995.01.01ஆம் திகதிக்குப் பின்னர் பிறந்தவராகவும், க.பொ.த (சா/த) பரீட்சைக்கு தோற்றி 3 பாடங்களில் C தரச் சித்தியுடன் கணிதம், தமிழ் உட்பட மொத்தம் 6 பாடங்களில் சித்தியடைந்திருத்தல் வேண்டும். கணிதப் பாடத்தில் சித்தியடையாதவர்களாயின் 5 பாடங்களில் C தரச் சித்தியுடன் தமிழ் உட்பட மொத்தம் 6பாடங்களில் சித்தியடைந்தவர்கள் மேற்படி முதலாம் கட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியும்.
மேலதிக விபரங்களுக்கு: அதிபர் உஸ்தாத் எம்.யூ.எம் றம்ஸி - 0777706083, அலுவலகம் - 0322247786
(ஏ.எம்.முஹம்மட் அஸ்லம்)