எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Monday, April 08, 2013

மட்டக்களப்பு - கொழும்பு ரயிலில் மோதுண்டு மூதாட்டி மரணம்

Print Friendly and PDF


மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த புகையிரதத்தில் மோதுண்டு சுமார் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டியொருவர் மரணித்துள்ளார்.

இந்த விபத்து மட்டக்களப்பு கொழும்பு புகையிரதப் பாதையில் 215ஆவது மைல் கல்லில் திராய்மடு எனுமிடத்தில் இன்று மாலை 5.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

காயமடைந்த நிலையில் கிடந்த மூதாட்டியை புகையிரத அதிகாரிகள் அடுத்துள்ள ஏறாவூர் புகையிரத நிலையத்திற்குக் கொண்டு வந்து சேர்த்துள்ளனர். எனினும் அப்பொழுது அவரது உயிர் பிரிந்து விட்டிருந்ததாக ஏறாவூர் புகையிரத நிலைய அதிபர் தெரிவித்தார்.

தற்சமயம் உடல் ஏறாவூர் புகையிரத நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதுபற்றி ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளதாகவும் நிலைய அதிபர் தெரிவித்தார்.

(குகதர்சன்)

Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2