Published On: Thursday, April 04, 2013
அட்டாளைச்சேனையில் சனிக்கிழமை இரத்ததானம் வழங்கும் நிகழ்வு

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் இயங்கிவரும் ஜம்இய்யதுத் தர்பிய்யத்தில் இஸ்லாமிய்யா அமைப்பின் இரத்ததான நிகழ்வு எதிர்வரும் 06ஆம் திகதி சனிக்கிழமை அந்நிறுவன வளாகத்தில் அமையப்பெற்றுள்ள ஹன்ழலா பின் ஆமிர் ஜூம்ஆ மஸ்ஜிதில் நடைபெறுவதற்கான ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையுடன் இணைந்துமேற்கொள்ளப்படும் இந்நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இரத்ததானம் வழங்க முன்கூட்டியே பெயர்களை பதிவு செய்துள்ளதாக அ றியமுடிகின்றது. இரத்ததானம் வழங்க விரும்புவோர் கீழ்வரும் தொலைபேசி0 0771587700 இலக்கத்துடன் தொடர்பினை ஏற்படுத்தி தங்களை பதிவு செய்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் வேண்டிக்கொள்கின்றனர்.