எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Monday, April 08, 2013

நள்ளிரவில் தம்பதிகள் வெட்டிக்கொலை: செங்கலடியில் சம்பவம்

Print Friendly and PDF


செங்கலடியில் இன்று நள்ளிரவு தம்பதிகள் இருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர். செங்கலடி விப்ரா பென்சி கோணர் உரிமையாளரும் அவரது மனைவியுமாகிய சிவகுரு ரகு, ரகு விப்ரா ஆகிய இருவருமே இவ்வாறு வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.


இக்கொலைச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது; இன்று நள்ளிரவு 12.30 மணியளவில் பதுளை வீதியில் அமைந்துள்ள அவர்களது வீட்டிற்கு வருகைதந்த இனம்தெரியாத நபர்கள் இவர்களை தலையில் தாக்கியுள்ளதுடன் கழுத்தில் கத்தியால் வெட்டியும் உள்ளனர். இதனால் சம்பவ இடத்திலேயே இருவரின் உயிர் பிரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

செங்கலடி மக்கள் மத்தியில் மிகுந்த பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள இக்கொலைச் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



(குகதர்சன்)

Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2