Published On: Friday, May 24, 2013
மிருகவதையைக் கண்டித்து பிக்கு தீமூட்டல்: வெசாக் தினத்துக்காக 38 நாய்கள் கொலை
மிருக வதையைக் கண்டித்து பெளத்த பிக்கு ஒருவர் தீமுட்டி தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார். இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை கண்டி, தலதா மாளிகைக்கு முன்னாள் இடம்பெற்றுள்ளது.

நாடெங்கிலும் வெசாக் தினங்கள் கொண்டாடப்பட்டுவரும் நிலையில் இவர் தலதா மாளிகைக்க முன்னாள் தீமூட்டிக்கொண்டது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பிக்கு தற்போது சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, வெசாக் தினத்துக்கு தொந்தரவுகள் தருவதாகக்கூறி புத்தள நகரில் 38 நாய்களுக்கு உணவில் விஷம் வைத்து கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. புத்தள நகரில் சுற்றித்திரிகின்ற நாய்களுக்கு இறைச்சியில் விஷம் வைத்து கொல்லப்பட்டுள்ளது.
கொல்லப்பட்ட 38 நாய்களின் உடல்களையும் புத்தள நகரசபை ஊழியர்கள் அகற்றியுள்ளதாக புத்தள பிரதேசபையின் தலைவர் தமயந்த தொலேவத்த தெரிவித்தார்.
புத்தள யுதகனாவ ரஜமகா விகாரையில் நடைபெற்ற வெசாக்தின கொண்டாட்டங்கள் பற்றிய கலந்துரையாடனின்போது நகரில் சுற்றித்திரியும் நாய்களின் தொந்தரவு பற்றி ஆராயப்பட்டுள்ளது.
எனினும், மேற்படி நாய்களை நஞ்சூட்டிக் கொலைசெய்தமை குறித்து விசாரணைகள் நடத்துமாறு பிரதேசவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
(முஹம்மட் பிறவ்ஸ்)