எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Friday, May 24, 2013

முஸ்லிம் மீடியா போரத்தின் தூதுக்குழு தம்புள்ளை பள்ளிக்கு விஜயம்

Print Friendly and PDF


முஸ்லிம் மீடியா போரத்தின் தூதுக்குழுவினர் இன்று வெள்ளிக்கிழமை தம்புள்ளை ஜும்ஆ பள்ளிவாசலுக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர். தலைவர் என்.எம். அமீன் தலைமையிலான குழுவினர் இன்று தம்புள்ளை பள்ளிவாசலுக்குச் சென்று அங்குள்ள பள்ளிவாசல் நிர்வாகத்தினரிடம் கலந்துரையாடியுள்ளனர்.

புனிதபூமி அபிவிருத்தி திட்டத்தின்கீழ் தம்புள்ளை பள்ளிவாசல் உடைக்கப்படும் அபாயம் தோன்றியுள்ள நிலையிலேயே இச்சந்திப்பு நடைபெற்றுள்ளது. இச்சந்திப்பில் தம்புள்ளை பள்ளிவாசலின் இருப்பிடத்தை உத்தரவாதப்படுத்துவது தொடர்பான விடயங்கள் கலந்தாராயப்பட்டன.

தம்புள்ளை பள்ளிவாசலுக்கு பாதிப்பு ஏற்படாதவகையிலேயே புனிதபூமி அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக காணி அமைச்சர் தென்னக்கோன் தகவல் வெளியிட்டுள்ளதாக என்.எம்.அமீன் பள்ளிவாசல் நிர்வாகத்திடம் தெரிவித்தார்.

இச்சந்திப்பில் முஸ்லிம் மீடியா போரத்தின் செயலாளர் எம்.ஏ.நிலாம், கலைவாதி கலீல், ஸாதிக் ஸிஹான் உள்ளிட்ட பலர் தூதுக்குழுவில் அடங்கியிருந்தனர்.

(முஹம்மட் பிறவ்ஸ்)

Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2