எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Friday, October 17, 2014

குடும்ப முரண்பாட்டினால் குழந்தையைக் கொன்ற தாய்

Print Friendly and PDF


கொலன்னாவை நாக முல்லயில் வசித்துவந்த 6 வயது பாத்திமா சக்கியா பொரளை சீமாட்டி சிறுவர் (லேடி ரிட்ஜ்வே) வைத்தியசாலையில் அனுமதிக் கப்பட்ட பின்னர் மரணமடைந்தார். இக்குழந்தையின் மரணத்துக்கு ஈன்றெடுத்த தாயே காரணமென தற்போது தெரியவந்துள்ளது. சிறுமியின் மரணம் தொடர்பாக பல்வேறுபட்ட சந்தேகங்கள் எழுந்துள்ளது. தாய தனது கோபம் காரணமாக பிள்ளையை அடித்து கழுத்தை நெரித்துள்ளதால் பிள்ளை மயக்க நிலையடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை பிள்ளையை கழிவறையில் தள்ளிவிட்டதால் தலையில் அடிபட்டு, மயக்கமடைந்த நிலையில் தாய் கழுத்துப் பகுதியை தடவியதாகவும் தெரிவிக்கப்படு கிறது. எனினும் தாயாரே தங்கையின் கழுத்தைப் பிடித்து நசுக்கியதாக அவரது மகன் குறிப்பிட்டுள்ளார். எது எவ்வாறு இருப்பினும் சக்கியாவின் கடந்தகால விடயங்களை ஆராய்ந்து பார்க் கும்போது இது கொலையே என்பதை ஊகிக்க முடிகிறது. பொலிஸ் அறிக்கையும் இதனை கொலையென்றே கூறுகிறது.

பிள்ளையின் தாயாரான 29 வயதுடைய ஜெஸ்லியா தற்போது வெல்லம்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன் கணவன் யாசீனும் பொலிஸாராரின் நீண்டநேரம் விசாரணைக்கு உட் படுத்தப்பட்டார். மனிதநேயமும் பிள்ளைப் பாசமுமற்ற யாசீன் மற்றும் ஜெஸ்லியா தம்பதி கொழும்பு, வாழைத்தோட்டத்தை பிறப்பிட மாகக் கொண்டவர்கள். வாழ்க்கை நடத்தத் தெரியாத இவர்களுக்கு 7 வயதில் சக்கீர் எனும் மகனும் 6 வயதில் (மரணமடைந்த) சக்கியாவும் பிள்ளைகளாக இருந்தனர். யாசீனும் ஜெஸ்லியாவும் குடும்பப் பிரச்சினை காரணமாக பலமுறை பிரிந்து வாழ்ந்து விவாகரத்து வரை சென்றும் மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையிலேயே தற்போது பிள்ளையின் மரணம் சம்பவித்துள்ளது.

இந்தப் பெற்றோரின் மனித நேயமற்ற ஈனச்செயல் வாழைத் தோட்டம் மட்டு மல்லாது முழு சமுதாயத்தையுமே கதிகலங்க வைத்துள்ளது. பெற்றோர் பிள்ளையின் மீது நீண்ட நாட்களாக மேற்கொண்டுவந்த கொடுமையின் இறுதிக் கட்டமே தற்போது கொலையில் முடிந்துள்ளது என்பது புலனாகிறது. இக்குழந்தை பெண்ணாகப் பிறந்ததில் இருந்து அதன் மரணம் வரை பல்வேறுபட்ட துன்பங்களை தாயாராலும், தந்தையாலும் அனுபவித்துள்ளது.

அயலவர்கள் மற்றும் தாய் தகப்பனுக்கிடையில் பிரச்சினைகள் வரும்போது பிள்ளையை அவ்வப்போது பொறுப்பேற்று வளர்த்ததாக் கூறப்படும் எம்.ஜே.எம்.ஜிப்ரி ஆகியோரின் தகவல்களில் இருந்து தெரியவருகிறது. பெற்றோரால் புறக்கணிக்கப்பட்ட போதெல்லாம் சக்கியாவை பொறுப்பெ டுத்து வளர்த்த சக்கியாவின் பாட்டனார் வீட்டுக்கு அருகில் இருந்தவரும் தற்போது பஞ்சிகாவத்தையில் வசித்து வருபவருமான எம்.ஜே.எம். ஜிப்ரி இச்சம்பவம் தொடர்பாக நவமணிக்கு வழங்கிய தகவல்களை இங்கு தொகுத்து தருகிகிறாம்.

ஜிப்ரி கண்கலங்கியவராகவும் கொலை செய்யப்பட்ட பிள்ளையின் பெற்றோரை வஞ்சித்தவராகவும் மேற்படி மனிதாபிமா னமற்ற சமூகத்துக்கு உதவாத குடும்பம் வாழைத்தோட்டத்தில் குறிப்பாக மஸ்ஜிதுன் நஜ்மி ஜூம்ஆ பள்ளிவாசலுக்கு முன்பாக உள்ள கணவனின் குடும்பத்துடன் ஒட்டியுறவாடி வாழ்ந்துள்ளனர். நிரந்தர வீடில்லாத இவர்கள், அன்றாடம் உழைப்பதைக் கொண்டு குடும்பம் நடாத்தி வந்தனர். இவ்வாறான ‹ழ்நிலையில் @பாதிய வருமானம் இன்மையால் குடும்பத்தில் அடிக்கடி சண்டை, சச்சரவுகள் ஏற்படுவதுண்டு. அப்போது குடும்பம் சீர்குலைவதும் பின்னர் இணைவதுமாக இருந்து வந்தது.

குடும்பச் சண்டைகளின்போது அவர் களது கோபத்தை இரண்டாவது பெண் பிள்ளையான சக்கியா மீது காட்டி வந்தனர். இதன்போது அக்குழந்தையை தாக்குவதும் கொடுமை செய்வதுமாக தங்களது வெறிøயத் தீர்த்துக்கொண்டனர். ஆனாலும், இருவருக்கும் ஆண் பிள்ளை மீதே அதிக பாசம் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. மகனுக்கு அடிப்பதோ அல்லது துன்பம் செய்வதோ இல்லை.

இந்நிலைமையில் யாசீனின் பெற்றோர் மற்றும் குடும்ப உறுப்பினர்களாலும் மனைவி ஜெஸ்லியாவின் குடும்பத்தாலும் அதிகமதிகம் சக்கியாவையே புறக்கணித்து வந்துள்ளமையும், சக்கியாவின் பாட்டனார் குடும்பம் சக்கியாவை புறக்கணிப்பதாகவும் அயலவர்களின் கண்களுக்கு அடிக்கடி தென்படுவதும் அவர்களின் செயற்பாடுகளாக இருந்துள்ளதை ஜிப்ரி மட்டுமல்லாது மரணவீட்டுக்கு வந்த அயலவர்களும் தெரிவித்தனர்.

சக்கியா பிறந்து நான்காவது மாதத்தில் தாய் ஜெஸ்லியா பிள்ளையை தனது தாயிடம் கொடுத்துவிட்டு வெளிநாடு சென்றுவிட்டார். ஆண் பிள்ளையை கணவனின் பெற்றோரிடம் கொடுத்துவிட்டுச் சென்ற
தாகவும் தெரிவித்த ஜிப்ரி, குழந்தையின் 9ஆவது மாதத்தில் தலையில் பாரிய கிரிமித் தொற்று ஏற்பட்டது. ஜெஸ்லியாவின் தாய் குழந்தையை பராமரிக்க முடியாமல் கைவிட்ட நிலையில், சக்கியாவை வைத்தியசாலையில் அனுமதித்து தனது பிள்ளை போன்று ஜிப்ரி சிகிச்சையளித்துள்ளார். பின்னர் ஒரு வருடமும் 9 மாதங்களும் வளர்த்தபின்னர் யாசீன் தனது பிள்ளையை தருமாறு ஜிப்ரியிடம் கேட்டபோது பொலிஸ் நிலையம் சென்று உரியமுறையில் குழந்தையை வழங்கியதாக ஜிப்ரி தெரிவித்தார். பின்னர் அப்பிள்ளை யாசீனின் தாய் வீட்டில் வளர்ந்தது. அங்கும் அப்பிள்ளைக்கு அடிக்கடி கொடுமை செய்து வந்துள்ளார்கள். இதனையறிந்த ஜிப்ரி மருதானை பொலிஸ் நிலைலயத்தில் முறைப்பாடு ஒன்றையும் பதிவு செய்துள்ளார்.

அடுப்பிலிருந்து நெருப்பில் விழுந்தது போல, வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய தாய், குழந்தையை எடுத்துச் சென்று அடிக்கடி சித்திரவதை செய்துள்ளார். குழந்தையை நெருப்பால் சுட்டும் உள்ளார். ஒருமுறை கையை உடைத்தும் இன்னொரு முறை காலை உடைத்தும் சக்கியாவுக்கு பெரும் கொடுமையை இழைந்துள்ளார் தாய்மையின் இலக்கணம் தெரியாத கொடூரத் தாய். இதனால் பிள்ளை ஒருகால் நொண்டியே நடந்து திரிந்தது. இதுதொடர்பாகவும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் öŒ#யப்பட்டுள்ளது. 

பெற்றோரின் சண்டையால் மீண்டும் ஜிப்ரி குழந்தையை பொறுய்பேற்று வளர்த்து வந்ததாகவும் அதன்போது குர்ஆன் ஓதுவதற்கு சேர்ப்பதற்கு அனுமதி கேட்டபோது, மீண்டும் தனது பிள்ளையைக் கேட்டுள்ளார் கொடூர தாய். கொலன்னாவையில் வீடு வாடகைக்கு எடுத்திருந்த வேளையிலும் பல கொடுமைகள் செய்வதாகக் கேள்விப்பட்டு ஜிப்ரி வெல்லம்பிட்டி பொலிஸ் நிøலயத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவுசெய்துள்ளார்.

மரணச் சம்பவத்தைத் தொடர்ந்து வெல்லம்பிட்டி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட தாயாரின் விசாரணையில் இருந்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. குழந்தை வீட்டுக்குள் சிறுநீர் கழித்ததாகவும், அதனால் குழந்தையின் பெண்ணுறுப்பில் கத்தியைச் சூடுகாட்டி சூடுவைத்தாக ஒப்புக்கொண்டார். இக்குழந்தையை தாய் கொடுமை செய்து வந்ததையும், வீட்டுக்குள் தனிமையாக பூட்டிவிட்டு அடிக்கடி வெளியில் செல்வதையும் அவதானிக்க முடிந்தால் மரண வீட்டுக்கு வந்திருந்த இதேவேளை, குழந்தையின் மரண வீட்டுக்கு வந்த கொலன்னாவ, நாகமுல்ல வீதியைச் சேர்ந்த அயல் வீட்டார் தெரிவித்தனர். 

சக்கியாவின் மூத்த சகோதரன் வாழைத்தோட்டம் அல்ஹிக்மா கல்லூரியில் இரண்டாம் ஆண்டில் கல்வி பயின்று வருவதாகவும் மேற்படிச் சிறுமி 2015ஆம் ஆண்டில் முதலாம் ஆண்டுக்கு பாடசாலையில் சேர்வதற்காக அல்ஹிக்மா கல்லூரியில் நேர்முகப் பரீட்சைக்கு அன்மையில் தோற்றியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு பல கனவுகளுடன் வாழத் துடித்த இளம் பிஞ்சு பெற்றோரின் சுகவாழ்வுக்கும் கோபத்துக்கும் வீணான முறையில் கொலை செய்யப்பட்டமை அனைவரையும் கதிகலங்கச் செய்துள்ளது.

மேற்படிச் சம்பவத்தின் பின்னராவது முஸ்லிம் சமுதாயம் இவ்வாறான விடயங்களை நல்லதொரு பாடமாகக் கருத்திற்கொண்டு அவதானமாக இருக்க வேண்டும். சிறுவர்களிடத்தில் அன்பு காட்டச் செல்லும் புனித இஸ்லாத்தில் இருப்பதற்கு சக்கியாவின் தாய் வெட்கப்பட வேண்டும்.
இய்சம்பவம் இடம்பெற்ற பகுதியிலுள்ள பள்ளிவாசல் மற்றும் அமைப்புகள் மற்றும் பொலிஸார் இருந்தும் சக்கியா சித்திரவதை செய்யப்பட்டது தெரிந்திருந்தும், பிள்ளையைக் காப்பாற்றி வந்த ஜிப்ரி பல தடவைகள் பொலிஸ் முறைப்பாடு செய்திருந்தும் சமூகம் இதை கண்டுகொள்ளவில்லை. இவர்களது தூக்கம் குழந்தையின் மரணத்தில்தான் கலைந்துள்ளது. 

தங்களை சமூக அமைப்புகள் எனக் கூறிக்கொள்பவர்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள் இதற்கெதிராக என்ன நடவடிக்கை எடுத்தார்கள்? இதுபோன்று எத்தனை சக்கியாக்கள் கண்ணுக்குத் தெரியாமல் இருப்பார்கள்? இதுபோன்ற ஈனச்செயல் எந்தக் குழந்தைகளுக்கும் நடக்கக்கூடாது. சக்கியாவின் ஜனாஸா கடந்த முதலாம் திகதி திங்கட்கிழமை மாலை வைத்தியசாலையிலிருந்து வாழைத்தோட்டத்தில் உள்ள பாட்டனார் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டபோது அங்குள்ள மக்கள் அனைவரும் அணிதிரண்டனர். அவர்களது கண்கள் கண்ணீரை சொரிந்தது. பின்னர் மஸ்ஜிதுன் நஜ்மியா பள்ளிவாசலில் ஜனாஸா தொழுகை நடைபெற்ற பின்னர், குப்பியாவத்தை மையவாடியில் பலரது கண்ணீர்ப் பூக்களுக்கு மத்தியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. 

அரக்கர்களின் பிடியிலிருந்து தப்பிய சக்கியா அமைதியாகத் தூங்குகிறாள். அவளுக்கு சுவனத்தைக் கொடுப்பதற்கு அல்லாஹ் அருள் புரிய வேண்டும்.

(ஏ.எஸ்.எம். ஜாவித்)

Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2