Published On: Saturday, October 18, 2014
சொந்த மகளின் உடம்பை விற்றுப் பிழைக்கும் தாய்

கொழும்பு மகளிர் மற்றும் சிறுவர் பாதுகாப்புப் பணியகத்தில் இயங்கிவரும் விசேட பொலிஸ் பிரிவுக்கு இளம் பெண்ணொருத்தியை அழைத்துவந்த மற்றொரு பெண், மேற்படி பணியகத்தின் பொறுப்பதிகாரி போபிடிகமவை சந்தித்தார்.
"இது எனது மூத்த சகோதரியின் மகள். பெயர் மேனகா. வயது 16. நான் இவளது சிறிய தாய். எனது சகோதரியென்ற போதிலும் குற்றம் புரிவதாக இருந்தால் மௌனமாக இருந்துவிட முடியாது. இவள் கடந்த சில நாட்களாக என்னுடன் எனது வீட்டில் தான் தங்கியிருக்கிறாள். இவளிடம் நிறைய பணம் புழங்குகிறது. நான் பணம் எவ்வாறு கிடைத்ததென வினவினேன். அம்மா வழங்கியதாகக் கூறினாள். அதைத் தொடர்ந்து அவள் வீறிட்டு அழத் தொடங்கினாள். அழுதழுது கூறிய விடயங்களைக் கேட்ட எனக்கு கோபம் மேலிட்டது. ஒருவாறு அடக்கிக் கொண்டேன்.
இந்தப் பச்சிளம் பெண்ணை எனது மூத்த சகோதரி விபசாரத் தொழில்புரியும் தம்பதியொன்றுக்கு விற்றுத் தீர்த்துள்ளாள். மாலபேயில் வசித்துவரும் இளம் தம்பதியினரே இந்தச் சட்டவிரோத விடுதியை நடத்தி வருகின்றனர். இது விடயமாக கண்டறியுமாறு கூறுவதற்கும், இவ்வாறான செயற்பாடுகளிலிருந்து இவ்வாறான இளம் பெண்களை காப்பாற்ற வேண்டுமென்பதற்காகவுமே இவளை பொலிஸ் நிலையம் அழைத்து வந்தேன் என தனது ஆதங்கத்தைக் கூறிமுடித்தாள்.
பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி போபிடிகம உடனடியாக செயலில் இறங்கினார். இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பொலிஸ் பரிசோதகர் பிரியங்காவுக்கு ஆலோசனை வழங்கினார். உடனடியாக விசாரணை ஆரம்பமாகியது.
"நான் பத்தாம் ஆண்டில் படிக்கும் போதே, தனக்கு அறிமுகமான ஒருவர் இருக்கிறார். அவர் நல்லவர். நல்ல சம்பளமொன்றை வழங்குவார். அவரது வீட்டுக்குச் சென்று அவர்கள் வழங்கும் தொழிலொன்றை மேற்கொள்ளுமாறு எனது தாயார் என்னைப் பணித்தார். நானும் அதற்கு இணக்கம் தெரிவித்தேன். தாயார் என்னை அவரிடம் அழைத்துச் சென்று கையளித்தார். அங்கு மாமனாரொருவர் இருந்தார். அவருடன் அவரது மனைவி மாத்திரமே இருந்தார். அந்த வீட்டுக்கு வெளியிலிருந்து அதிக மான மாமாமார்கள், வயதானவர்கள் அடிக்கடி வருவார்கள். அவர்கள் ஒவ்வொருவருடனும் என்னையும் சேர்த்து அங்கிருக்கும் அறையொன்றினுள்ளே இட்டு மூடிவிடுவார்கள். அவ்வாறு வரும் அவர்கள் என்னை....!
தொடர்ந்து அந்த இளம் பெண் கூறிய வார்த்தைகளை எழுத்தில் வடிக்க முடியாதுள்ளது. இந்த இளம் பெண் அந்தளவுக்கு காமுகர்களது அட்டூழியங்களுக்கு ஆளாக்கப்பட்டுள்ளாள். விசாரணை மேற்கொண்ட பணியகப் பொலிஸ் அதிகாரிகளது கண்கள் குளமாகுமளவுக்கு இச்சிறிய மேனகா கொடுமைப்படுத்தப்பட்டுள்ளாள்.
மேனகாவை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய இடம் தொடர்பான விபரங்களை கேட்டறிந்து கொண்ட பொலிஸ் அதிகாரிகள் மாலபே பிரதேசத்துக்கு விரைந்து குறித்த வீட்டை சுற்றி வளைத்து அந்த இளம் ஜோடியை கைது செய்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின்போது வெளிவந்த தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. "இந்தச் சிறுமியின் தாயாரே இவளை அழைத்து வந்து எம்மிடம் ஒப்படைத்தாள்.
சிறுமியின் தாய் இரண்டு வாரங்களுக்கொரு முறை இங்கு வந்து எம்மிடம் 30,000 ரூபா பணத்தை பெற்றுச் செல்கிறாள். இவ்விளம் பெண்ணை 5000 ரூபா முதல் 10,000 ரூபா வரை காமுகர்களுக்கு வழங்கி வருகின்றோம்' என்றனர். இந்தத் தகவலைத் தொடர்ந்து இவர் கள் மேலதிக விசாரணைகளுக்காக தேசிய சிறுவர் பாதுகாப்புப் பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
மேனகா தங்கியிருந்த வீடு பொலிஸாரி னால் சுற்றி வளைக்கப்பட்டதைக் கேள்விப்பட்டதும் மேனகாவின் தாயார் தலைமறை வாகிவிட்டாள். இவளை கைது செய்வதற்கு பொலிஸார் இரகசியத் திட்டங்கள் பலவற்றை முடுக்கிவிட்டிருந்தனர். இவளது முதல் திருமணத்தின் மூலம் பிறந்தவளே மேனகா. தாயின் மோசமான நடவடிக்கைகள் காரணமாகவே மேனகாவின் தந்தை தாயை கைவிட்டுச் சென்றுள்ளார். அதன்பின் அவள் பல்வேறு நபர்களுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தாள்.
பொலிஸாரினால் கையேற்கப்பட்டு நன்னடத்தைப் பிரிவில் மேனகா சேர்க்கப்பட்டிருந்ததினால் அவளது தாய் பொருளாதார ரீதியாக பெரும் சிரமங்களை எதிர்கொண்டாள். இதனால் அதற்கான வேறொரு வழியை அவள் நாடினாள். கிராமிய பெண்களை கொழும்புக்கு அழைத்து வந்து பாலியலில் ஈடுபடுத்தும் தரகராக செயற்பட்டாள். இந்தத் தகவல் பொலிஸாருக்குக் கிட்டியது. பணியகத்தோடு மிக நெருக்கமாகச் செயற்படும் முச்சக்கரவண்டிச் சாரதியொருவரே இந்த தகவலையும் அவளது தொலைபேசி இலக்கத்தையும் பொலிஸ் அதிகாரி பிரியங்கரவுக்கு வழங்கினார்.
பிரியங்கர குறித்த தாயாருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாட லொன்றை மேற்கொண்டார். அவள் பொரளைக்கு வருமாறும் அங்கு இது தொடர்பான கொடுக்கல், வாங்கல் பற்றி தீர்மானிக்க முடியுமெனவும் கூறினாள். இதற்கமைய பிரியங்க உட்பட பொலிஸ் அதிகாரிகள் சிலர் சிவில் உடையில் சென்று பொரளையிலுள்ள ஹோட்டலொன்றுக்கு அருகாமையில் இவளை சந்திப்பதற்கு திட்டம் தீட்டினர்.
இதன்படி இவள் கையும், களவுமாக பொலிஸாரிடம் சிக்கிக் கொண்டாள். தேசிய சிறுவர் பாதுகாப்புப் பணியகத் தலைவர் சட்டத்தரணி அனோமா திசாநாயக்காவின் ஆலோசனைக்கிணங்க விஷேட பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி போபிடிகொடவின் வழிகாட்டலின் கீழ் பிரியங்கர உட்பட பொலிஸ் அதிகாரிகள் சிலரின் பங்களிப்புடன் இவ்விசாரணைகள் இடம்பெற்றன.
(எம்.எச்.ஏ. ஹம்ஸா)