Published On: Wednesday, October 22, 2014
பெண்களின் மார்பகங்களை கடித்தவர் மரத்தில் கட்டிவைப்பு: இரத்தினபுரியில் சம்பவம்
இரத்தினபுரி நகரத்தில் பெண்களை மார்பகங்களை கடித்துவிட்டு தப்பியோடுகின்ற நபர் ஒருவரை நகர இளைஞர்கள் மடக்கி பிடிக்கப்பட்டு மரத்தில் கட்டிவைக்கப்பட்டார். பொலிஸாரிடம் இவரை ஒப்படைப்பதற்காக தகவல் கொடுத்தும் பொலிஸார் ஸ்தலத்துக்கு வரவில்லையென பிரதேசவாசிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இரத்தினபுரி நகரத்தில் பெண் ஒருவரை தாக்கியதாக பொலிஸார் ஒருவர் மீது குற்றம்சாட்டப்பட்டது தொடர்பாவே பொலிஸார் ஸ்தலத்துக்கு வரவில்லையென பிரதேசவாசிகள் சந்தேகிக்கின்றனர். இதனால், மரத்தில் கட்டப்பட்டிருந்த குறித்த நபர் பிரதேசவாசிகளால் அவிழ்த்துவிடப்பட்டார்.
பின்னர் இடம்பெற்ற விசாரணைகளின்போது இவர் ஒரு மனநோயாளி என இனம்காணப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
